300 படத்தில் நடிச்சு இருக்கேன்.. குடிப்பழக்கத்தில் வாழ்க்கை போச்சா? மனம் திறந்த காஜா ஷெரீப்!
சென்னை: சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள், காரணமே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படி 80 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த காஜா ஷெரீப் சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். தற்போது இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான், காஜா ஷெரீப். இவர் பாக்யராஜ் நடிப்பில் அந்த 7நாட்கள் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இதைத் தொடர்ந்து, விசுவின் சம்சாரம் அது மின்சாரம் விசுவின் கடைக்குட்டியாக நடித்து இருப்பார். பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துக்கொண்டு இருந்த காஜா ஷெரீப் திடீரென இருக்கும் இடமே தெரியாமல் சினிமாவை விட்டு காணாமல் போனார்.

300 படத்தில் நடித்து இருக்கிறேன்: தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், சிவாஜி,ரஜினி, விஜயகாந்த் என பலருடன் நடித்து இருக்கிறேன். நான் கலராக இருந்ததால், ஹீரோவாகலாம் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நான் காமெடியனாகத்தான் இருக்க ஆசைப்பட்டேன். புதிய வார்ப்புகள் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 1,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என அனைத்து மூன்று முதல்வரிகளிடமும் பரிசு வாங்கி இருக்கிறேன். இதுவரை 200க்கும் மேற்பட்ட விருதை என் வீட்டில் வைத்து இருக்கிறேன்.
விலக காரணம் இதுதான்: சினிமாவில் நான் நினைத்த இடத்தை அடைய முடிவில்லை அதற்கு காரணம் என் உயரம். நான் நல்ல உயரமாக இருந்து இருந்தால், நிச்சயம் ஹீரோவாகி இருப்பேன். மேலும், நடித்து நடித்து அலுத்துவிட்டதால், சினிமா மீது ஆர்வம் போய்விட்டது, இதனால், சினிமாவை விட்டு விலகினேன். இதைத்தொடர்ந்து மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினேன். மேலும், சிலர் குடிப்பழக்கத்தால் சினிமா வாய்ப்பை தவறவிட்டதாக பேசுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் யாராவது எனக்கு வாங்கி கொடுத்தார்களா… இல்லையே… என்னை பிடிக்காதவர்கள் என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று அந்த பேட்டியில், நடிகர் காஜா ஷெரீப் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











