துபாயில் டான்ஸ்.. விஜயகாந்துக்கு 2 வரி இரங்கல் அறிக்கை வெளியிட முடியல.. அஜித்தை விளாசிய அந்தணன்!
சென்னை: நடிகர் அஜித் குமார் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள், அவர் வெளியிடும் அறிக்கைகள் என பலவும் சோஷியல் மீடியாவில் சரியாக வந்துக் கொண்டிருக்கும் போது மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்துக்காக இரண்டு வரி இரங்கல் பதிவு போட்டு ஒரு அறிக்கையை சுரேஷ் சந்திரா மூலமாக கொடுக்க முடியாதா அஜித்தால் என கேட்டு விளாசி உள்ளார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன். அஜித் செய்து வரும் செயல் கொஞ்சம் கூட சரியில்லை என்றும் மேலும், மேலும் தவறு செய்துக் கொண்டிருக்கிறார் என்றும் ஒரே போடாக போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக நடிகர் அஜித் இருந்து வந்தாலும் மற்ற நடிகர்கள் போல இல்லாமல் தனக்கென தனி சித்தாந்தத்தை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். நடிகர் சங்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கலைத்து விட்டார். தல என்கிற டைட்டில் வேண்டாம் என்றும் ரசிகர்கள் யாரும் தன்னை தல என அழைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாரா அஜித்?: விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை பல அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். வெளிநாட்டில் இருந்த சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். ஆனால், நடிகர் அஜித் இதுவரை இரங்கல் தெரிவித்தாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை என்கின்றனர். அஜித் போன் செய்து பேசினார் என்றும் குறுஞ்செய்தி அனுப்பினார் என்றும் சொல்லப்படும் நிலையில், அதற்கான ஆதாரத்தை கூட வெளியிடவில்லை எல்லாம் சுத்த பொய் என அந்தணன் பேசியுள்ளார்.
துபாயில் டான்ஸ்: நடிகர் அஜித் குமார் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் விழா என துபாயில் ஜாலியாக டான்ஸ் ஆடி கொண்டாடி வருகிறார். வீடியோ எடுத்த ரசிகர்களின் கேமராக்களை புடுங்கி அதனை டெலிட் செய்து வருகிறார். இதெல்லாம் செய்து வரும் அஜித்தால் ஏன் விஜயகாந்த் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட போட முடியவில்லை என்கிற கேள்வியை அந்தணன் எழுப்பி உள்ளார்.
கேப்டனுக்கு 10 லட்சம் கொடுத்தாரா?: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் காசு வாங்க வேண்டாம் என சொல்லி விட்டு நடிகர் அஜித் 10 லட்சத்துக்கான செக் கொடுத்ததாக ஒரு உருட்டுக் கதையை உருட்டி வருகின்றனர். அது உண்மையாகவே இருந்தாலும், தனது படங்கள் வெளியாகும் போது அதே போல அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்கக் கூடாது என தயாரிப்பாளர்களிடமும் தியேட்டர் ஓனர்களிடமும் சொல்வாரா அஜித் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
சோஷியல் மீடியா சண்டை: அஜித்தின் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் சண்டை வெடித்து வருகிறது. முதலமைச்சர் 2 முறை வந்து அஞ்சலி செலுத்துகிறார். ஆனால், அஜித்தால் ஒரு 2 வரி அறிக்கை கூட வெளியிட முடியாது என அமைதி காப்பது நல்லது கிடையாது என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்தணன் பேசியுள்ளார். அது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் அதில், தலையிடக் கூடாது என அந்தணனுக்கு அஜித் ரசிகர்கள் அட்வைஸ் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











