ஸ்ரீகாந்தோட மாமாவா நான்.. என்னால அவர் அழிஞ்சாரா.. கடுப்பான அந்தணன்.. உண்மை என்னான்னு தெரியுமா?

சென்னை: சமீபத்தில் யோகி பாபு குறித்து அந்தணன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல தயாரிப்பாளர்களை அவர் காலி செய்து வருவதாக கூறியிருந்தனர். யோகி பாபு மறைமுகமாக அந்தணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில், ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என வரிசையாக ஹிட் கொடுத்து வந்த ஸ்ரீகாந்த் சினிமாவில் காலியாக காரணமே அவரது மாமா அந்தணன் தான் என்கிற பஞ்சாயத்து வெடித்துள்ளது.

அதனை கேள்விப்பட்டு ஆடிப்போன அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் ஸ்ரீகாந்த் மாமா கிடையாது என்றும் ஸ்ரீகாந்துக்கு முடிந்த வரை நல்லது தான் செய்தேன். அவரை ஒருநாளும் கெடுக்கவே இல்லை என்று பகிரங்கமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

anthanan srikanth interview

நடிகர் ஸ்ரீகாந்துக்கும் அந்தணனுக்கும் இடையேயான உறவு குறித்தும் அவர் வெளிப்படையாக அந்த பேட்டியில் பேசியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உங்களால் தான் ஸ்ரீகாந்த் கரியர் காலியாகியிருக்கும் என கலாய்த்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்த் பேட்டி: ஷங்கரின் நண்பன் படத்தின் படப்பிடிப்பே தன்னால் 2 மாதங்கள் தாமதமானது என்றும் சினிமாவில் சில தவறுகளை செய்தது தான் நான் காணாமல் போக காரணமே என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக கொடுத்த பேட்டியில் தனது மாமாவும் தனது மேனேஜரும் வாழ்க்கையில் விளையாடி விட்டனர் என்றும் அவர்களால் தான் சினிமா வாழ்க்கை நாசமானது என்றும் ஸ்ரீகாந்த் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

அந்தணன் தான் மாமாவா?: பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் தான் ஸ்ரீகாந்தின் மாமா என்றும் அவர் தான் ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கையையே காலி செய்து விட்டார் என்றும் சோஷியல் மீடியாவில் ஸ்ரீகாந்தின் பேட்டியுடன் புரளி ஒன்று கிளம்ப ஆரம்பித்து விட்டது. இதை அறிந்த அந்தணன் அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீகாந்த் பிராமணர் நான் பிராமணர் இல்லை. நான் எப்படி ஸ்ரீகாந்துக்கு மாமாவாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சுந்தர் என்பவர் தான் ஸ்ரீகாந்தின் மாமா. அந்த பெயரை அவர் அந்த பேட்டியில் சொல்லியிருந்தால் இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருக்காது என்றும் கூறினார்.

நன்மை மட்டுமே செய்தேன்: ஸ்ரீகாந்துக்கு சினிமா ஆலோசகராக மட்டுமே நான் இருந்தேன். கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு என அவர் நினைக்கிறார். அந்த படத்தின் இயக்குநர் சரிகிடையாது என்று சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை. பல உப்புமா கம்பெனிகளிடம் இருந்தும் அனுபவம் இல்லாத இயக்குநர்களிடம் இருந்து அவரை பல முறை காப்பாற்றியதே நான் தான். அவரது மாமா தான் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வந்தார். அவருடைய மாமாவால் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கை அழிந்து போனது என அவர் ரொம்பவே உறுதியாக நினைக்கிறார் என்றும் அந்தணன் பேசியுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர்: ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்து அறிமுகம் ஆகும் போது என்னுடைய பக்கத்து வீட்டில் தான் ஸ்ரீகாந்த் இருந்தார். அதன் பின்னர் நானே என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது படங்கள் குறித்து விவாதிப்பார். கதைகளை கேட்கச் சொல்வார். இப்படித்தான் ஸ்ரீகாந்துக்கும் எனக்குமான நட்பு உருவானது. நான் அவருடைய மாமா கிடையாது என விளக்கமளித்துள்ளார் அந்தணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X