நெப்போலியன் ரொம்ப பாவங்க.. மனசாட்சி இல்லாமல் வதந்தி பரப்பும் அரக்கர்கள்.. கொந்தளித்த பிரபலம்!

சென்னை: நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் மோசமான கருத்துக்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் டேனியல் ராஜா, நெப்போலியன் சார்பில் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை விடவேக்கூடாது என்று பேசி உள்ளார்.

நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பலரும் அவருக்கு அனுதாபம் தெரிவித்து வந்த நிலையில், அவரை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர் . இதன் மூலம், ஒரு மனிதன் பாதிக்கப்படும் போது அவனுக்கு ஆதரவாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, நாம் மிகவும் நல்ல சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியே, நான்கு நாள் கழித்து இணையத்தில் நெப்போலியன் மகன் குறித்து மிகவும் மோசமான செய்தி ஒன்று பரவியது.

nepolien dhanush nepolien health

நெப்போலியன் மகன்: நடிகர் நொப்போலியன் அவர்களின் மகன் தனுஷுக்கு திருமணம் நடைபெற்ற போது, அனைவருமே நாட்டாமைகளாக மாறிவிட்டனர். எப்படி ஒரு நல்ல பெண்ணை, இப்படி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கலாம். நெப்போலியனின் பணத் திமிரை பார்த்தீர்களா... என படுமோசமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு மகனுக்கு தந்தையாக நெப்போலியன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நொப்போலியன், தனது மகனுக்காக செய்து இருக்கிறார். இப்படி ஒரு அப்பா கிடைக்க தனுஷ் தான் கொடுத்துவைத்து இருக்க வேண்டும். மகனுக்காக அரசியல், சினிமா என அனைத்தையும் விட்டு விட்டு தனது மகனுக்காக அமெரிக்கவில் செட்டில் ஆகி விட்டார். அவருக்கு தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை, அதற்காக ஒரு பெண்னை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். அந்த பெண்ணும் தாய்மை உள்ளம் கொண்ட பெண்ணாக இருப்பதால், தனுசை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது.

ரொம்ப பாவம்: மகனின் திருமணத்தை பார்த்து செய்த நெப்போலியன் வேதனைப்படும் அளவிற்கு, தனுஷ் இறந்துவிட்டதாக இணையத்தில் விஷமிகள் ஒரு செய்தியை பரப்பிவிட்டனர். மகன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் நெப்போலியனின் மனம் எப்படி வேதனை அடைந்து இருக்கும் என்று என்னால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை. இந்த, விஷமா செய்தியால் மனமுடைந்த நெப்போலியன், இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பியவன் யாராக இருந்தாலும் விடவேக்கூடாது என்பதில், தெளிவாக இருக்கிறார். இதனால், தனுஷ் உடல்நிலை பற்றியும் திருமணம் பற்றியும் தவறாக செய்தி வெளியிடுபவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனுஷுக்கு சிகிச்சையளிக்கும் இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா, நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.

இது உண்மையில் பாராட்டுக்குரிய, இதை கண்டும் காணாமல் சென்றுவிடக்கூடாது, இதுபோன்ற செய்தி பரப்புபவர்கள் யாராக இருந்தாலும், இவன் தான் அதை செய்தான் என்று, இந்த சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் அப்போது தான், அடுத்தவர்கள் இதுபோன்ற தவறை செய்ய மாட்டார்கள் என்று வலைபேச்சு அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X