பாடகியுடன் தனி குடித்தனம்.. ஆர்த்தி ரொம்ப பாவம்? ஜெயம் ரவி இப்படி பண்ணுவார்னு எதிர்பாக்கல!
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில், ரவி மோகன் மீண்டும் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், நானும் சில சேனல்களில் ஜெயம் ரவி அப்படிப்பட்டவர் கிடையாது என்று பேசி இருக்கிறேன். ஆனால், அதிகாரப்பூர்வமாக ஒருவர் சில தகவல்களை கூறினார். அதாவது, ஜெயம் ரவி கோவாவில் தங்கி இருப்பதே பாடகி கெனிஷாவின் வீட்டில் தான் என்று கூறினார். அதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஆர்த்தி கொடுத்த டார்ச்சரால் தான் அவர், கோவாவிற்கு போனார். அப்போது தான் கெனிஷாவை சந்தித்தார் என்றேல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், தவறே செய்யாத ஒருவர் மீது மனைவி சந்தேகப்படுகிறாள் என்றால், அது தவறு என்று சொல்லாம். ஆனால், ஜெயம் ரவி மீது தவறு இருக்கும் போது மனைவி சந்தேகப்படுகிறாள், அதை தவறு சொல்வதில் நியாயமே இல்லை.

திட்டத்துடன் தான் இருக்கிறார்: ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த போது, பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருக்கிறார். அதனால் தான், ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சனை என்று செய்திகள் பரவிய போது. செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, பாடகி கெனிஷா பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள், அவர் ஒரு ஹீலர், பலரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து ஹீலர் மையத்தை விரைவில் தொடங்குவோம், இருவருக்கும் இருப்பது நட்பு மட்டும் தான் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி, கெனிஷா பற்றி யாருமே பேசவே இல்லை. ஆனால், தற்போது திருமண விழாவிற்கு இருவரும், ஜோடியாக வந்து இருக்கிறார். இது செய்தியாக மாறும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது, இது செய்தியாக்க வேண்டும் என்பது தான் ஜெயம் ரவியின் எண்ணமாக இருந்துள்ளது.
ஆர்த்தி பாவம்: இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட விஷயம், இதில் யாருமே தலையிடுவதற்கு உரிமை இல்லை. இது தொடர்பாக கேள்வி கேட்க ஆர்த்திக்கு மட்டும் தான் உரிமை உள்ளதே தவிர மூன்றாவது நபராக இருக்கும் நாமெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், எனக்கும் கெனிஷாவுக்கு நல்ல நட்பு என்று சொல்லிவிட்டு மீண்டும் முகத்தில் கறியை பூசுவது போல இப்படி, செயலை ஜெயம் ரவி செய்யும் போது தான் அனைவரும் கேள்வி கேட்கின்றனர். விரைவில், விவாகரத்து கிடைத்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கான முன் சமிக்ஞை தான் இது. இந்த விஷயத்தில் ஆர்த்தி ரொம்ப பாவம், ஜெயம் ரவி இப்படி ஒரு வேலையை செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஜெயம் ரவியின் இந்த செயலால் அவருக்கு கெட்ட பெயர் தான், இந்த பெயரை அவர் மீட்டு எடுக்கவே பல வருடமாகும் என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











