அட கொடுமையே.. சிம்புவை கடத்த பார்த்தார்களா? அந்தணன் சொல்வது என்ன?
சென்னை: சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வந்த 'அரசன்' திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கோவில்பட்டியில் நடந்து முடிந்தது. படத்தின் கதையும் அதற்கு ஏற்றவாறு, பாதி கதை கோவில்பட்டியில் நடப்பது போன்று, மீதி சென்னையில் நடப்பது போன்றும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனலில் விரிவாக பேசி உள்ளார்.
அதில், அரசன் படம் தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. ஐசரி கணேஷ், அந்த படத்திற்காக செலவு செய்த தொகையையும் திரும்ப கேட்கிறார். ஆனால், சிம்பு என்ன சொல்கிறார் என்றால், "நான் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டேன், அதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாது" என்று தெளிவாக மறுத்துவிட்டார். இந்த பிரச்சனை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இதை முன்னாடியே பேசி தீர்த்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று படப்பிடிப்பு நிறுத்தும் அளவுக்கு இது போயிருக்காது. இதில், இன்னொரு பெரிய சர்ச்சை என்னவென்றால், தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவிக்காமல் பெப்சி சங்கம் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்று படப்பிடிப்பை நிறுத்தியது.

அரசன் பட பிரச்சனை: ஆனால், இதே மாதிரி தனுஷ் படத்திற்கு பிரச்சனை வந்தபோது, தயாரிப்பாளர் சங்கம் பெப்சியிடம் "படப்பிடிப்பை நிறுத்துங்கள்" என்று கேட்டபோது, "அது உங்கள் பிரச்சனை" என்று பெப்சி சொல்லி விலகியது. அதேபோல், 'செக்க சிவந்த வானம்' படம் நேரத்தில் மைக்கேல் ராயப்பன் பிரச்சனை காரணமாக படத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டபோது கூட, "அது பெரிய இயக்குனர் மணிரத்னம் படம், அதை நிறுத்த முடியாது" என்று பெப்சி மறுத்தது. ஆனால், இப்போது மட்டும், ஐசரி கணேஷ் சொன்னதற்காக தன்னிச்சையாக சென்று படப்பிடிப்பை நிறுத்துவது எந்த அளவிற்கு நியாயம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கமே பெப்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறது.

பெரிய பஞ்சாயத்து: ஐசரி கணேஷ் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். பிறகு அதை வாபஸ் வாங்கி, பேசி சமாதானமாக தீர்த்துக்கொள்ளலாம் என்றார். ஆனால், அதன் பிறகும் இருவரும் பேசிப் பிரச்சனையை முடிக்கவில்லை. இப்போது நிலைமை என்னவென்றால், "பணம் தரவில்லை என்றால் படப்பிடிப்பு நடக்க விடமாட்டோம்" என்ற நிலையில் ஐசரி கணேஷ் தரப்பு இருக்கிறது. பெப்சி ஏன் ஐசரி கணேஷுக்கு ஆதரவாக செயல்படவதற்கு காரணம். ஐசரி கணேஷ் கல்லூரியில் பெப்சி ஊழியர்களின் வாரிசுகளுக்கு இலவச படிக்கிறார்கள். இதனால், அவருக்கு லாயலாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த பிரச்சனை இன்னும் தீவிரமாகி, சிம்புவை இந்த படத்திலிருந்து நீக்கி, கருணாஸின் மகன் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த பிரச்சனையில் பணத்தை விட ஈகோ தான் அதிகமாக உள்ளது.
கடத்த பார்த்தார்கள்: இதே போலத்தான் சிம்புவுக்கும் மைக்கேல் ராயப்பனுக்கும் இடையே நடந்த பிரச்சனையில் சிம்பு தரப்பில் நியாயம் இருந்தது. அதாவது 'AAA' படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது ஒபிஎஸ் அணி, எடப்பாடி அணி என இரண்டு அணி இருந்தது. இதில் லாரன்ஸ் சில சினிமா பிரபலங்களை அழைத்துக்கொண்டு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக மைக்கல் ராயப்பன் சிம்புவை அழைத்துச் செல்ல முயற்சி செய்ததாகவும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே சிம்புவை நேரடியாக அங்கிருந்து கடத்தி சென்று விடலாம் என பிளான் செய்ததாக சிம்பு நினைக்கிறார். அதற்கான முயற்சிகள் நடந்ததாக சிம்பு சொல்கிறார். அதன் காரணமாகத்தான் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு தர வேண்டிய பணத்தை தராமல் இருக்கிறார். இதனால்தான் இந்த பிரச்சனைகளுக்குள் பணத்தைவிட ஈகோ அதிகமாக இருக்கிறது என அந்தணன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











