குபேரா: இயக்குநர் ஏமாற்றி விட்டார்.. இதுதான் தனுஷூக்கு எரிச்சல்.. அந்தணன் பேட்டி!

சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் நடிப்பில் உருவான குபேரே படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தமிழ் ரசிகர்கள் தனுஷின் நடிப்பை தவிர, படத்தில் கதையே இல்லை என விமர்சித்து வருகின்றனர். இதனால், தமிழகத்தின் படத்தின வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து சினிமா பத்திரிக்கையாளரான அந்தணன் Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், குபேரா படம் இயக்குனர் சேகர் கம்முலா தனுசை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தனுஷ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ஹீரோ அவரை படம் ஆரம்பிக்கும் போதே பிச்சைக்காரனாக காட்டிவிட்டு கடைசியில் பல கோடிக்கு அதிபராக காட்டி இருக்கிறார். அவர், எதுவுமே தெரியாதவராக இருந்தாலும் படித்த பெண்ணுடன் ராஷ்மிகாவுடன் அவர் சேர்ந்த பிறகு, அந்த பணத்தை வைத்து பிச்சைக்காரர்களுக்கு என்ன செய்கிறார் என்று கதையை நகர்ந்து இருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு இதை ஏதோ ஒரு காவியம் போல எடுக்கிறேன் என்று படத்தை மொத்தமாக காலி செய்து விட்டார்.

Kubera dhanush Anthanan
Photo Credit:

குபேரா: தனுஷ் இந்த படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் அவரின் நடிப்பை பார்க்கும்போது கமலஹாசனை நினைவுபடுத்துவது போல உள்ளது. இந்த திரைப்படத்தில் அவருக்கு விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், படம் வெற்றி பெற்று விருது கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பை இயக்குநரே கெடுத்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் நல்லவனா, கெட்டவனா என்பதை சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால், நாகார்ஜுனாவின் நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கில் குபேரா படத்தின், வசூலும் நன்றாக இருக்கிறது. ஆனால், தமிழில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

பாவம் ராஷ்மிகா : அதேபோல ராஷ்மிகா மந்தனாவுக்கும் சரியான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை. அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் போது, அவரின் மேக்கப்பையும் டல்லாகி, அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்காமல், ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போல நடிக்க வைத்திருக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாகவே அமைந்துவிட்டது. இந்த படத்தால், ராஷ்மிகாவிற்கு இனி வரும் படத்தில் சம்பளத்தை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. அனைவருமே சேகர் கம்முலா, மிகப்பெரிய டைரக்டர் என நம்பி ஏமாந்து விட்டார்கள்.

அந்த எரிச்சல்: குபேரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மிகவும் ஆக்ரோஷமாக பேசி இருந்தார். அந்த படத்தை பார்த்த பலரும் படத்தில் ஒன்றுமே இல்லை என்றனர். இன்னும் சிலர் தனுஷ், சிவகார்த்திகேயனை பற்றி தான் பேசினார், நயன்தாராவை தான் பேசினார் என்றெல்லாம் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் தனுஷை பார்த்து வளர்ந்தவர் தான். இன்றைக்கு சிவகார்த்திகேயன், தனுஷ் வாங்கும் சம்பளத்தை வாங்குகிறார். தன்னைப் பார்த்து வளர்ந்த ஒருவருக்கு நமக்கும் கிடைக்கும் கைதட்டலே கிடைக்கிறதே என்று நினைக்கும் போது எரிச்சல் நிச்சயம் வரும், அது தான் மனிதனின் இயல்பு என வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X