twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மியூசிக் தான் என் வாழ்க்கை'... பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா ஒன்இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி

    ஆண்டனி திரைப்படத்தின் இசையமைப்பாளர் சிவாத்மிகா ஒன்இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி

    |

    Recommended Video

    தமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி

    சென்னை: இசை தான் தனது வாழ்க்கை என ஆண்டனி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள இளம்பெண் சிவாத்மிகா, ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆண்டனி. முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளம் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படத்துக்கு 19 வயதே ஆன இளம்பெண் சிவாத்மிகா இசையமைத்துள்ளார். சின்ன பெண்ணாக இருந்தாலும், படத்தின் பாடல்களில் மிரட்டி இருக்கிறார்.

    ஒன்இந்தியாவுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி...

    உங்களை பற்றி....

    உங்களை பற்றி....

    என் பெயர் சிவாத்மிகா. நான் பிளஸ் 2 முடித்தவுடனே ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைக் கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதக் கோர்ஸ்சாக எலக்ட்ரானிக் மியூசிக் புரோடக்ஷன் படித்தேன். அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுதான் மியூசிக் பயின்றேன். இந்த துறையில் சாதித்தவர்களை விட சறுக்கியவர்கள் தான் அதிகம். அதனால் கைவசம் ஒரு டிகிரியாவது இருந்தால் நல்லது என்று அறிவுரை வழங்கினார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. நம் வாழ்வில் இரண்டாவது சாய்ஸ் இருந்தால், முதல் சாய்ஸில் நாம் முழு கவனம் செலுத்த மாட்டோம். அதனால் எனக்கு இருப்பது ஒரு சாய்ஸ்தான். அதில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் உழைக்கிறேன்.

    ஆண்டனி வாய்ப்பு எப்படி வந்தது

    ஆண்டனி வாய்ப்பு எப்படி வந்தது

    ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் ஃபேஸ்புக்கில் கொடுத்த விளம்பரத்தை பார்த்து, எனது டியூன்களை அனுப்பி வைத்தேன். பின்னர் படத்தின் இயக்குனர் குட்டி குமார் எனது டியூன்களை கேட்டுவிட்டு, எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்.

    படத்தின் பாடல்களை பற்றி...

    படத்தின் பாடல்களை பற்றி...

    மொத்தம் அறு பாடல்கள் கம்போஸ் செய்துள்ளேன். ஆண்டனி படம் எனது முதல் படமாக அமைந்தது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. ஏனென்றால், பொதுவாக ஒரு லவ் சப்ஜெக்ட் படம் என்றால் அதற்கு ஏற்றார்போல் தான் மியூசிக் பண்ண முடியும். ஆனால் இது முழுக்க முழுக்க வித்தியாசமான படம் என்பதால், ஜாஸ், வெஸ்டர்ன், மெலடி என ஆறு பாடல்களையும் வித்தியாசமான ஜானரில் கொடுத்துள்ளேன். இதன் மூலம் என்னை யாரும் ஸ்டீரியோடைப் செய்யாமல் இருக்க உதவும்.

    பின்னணி இசை...

    பின்னணி இசை...

    இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்பதால், புதுப்புது ஓசைகளை பயன்படுத்தி உள்ளேன். அதேபோல நிறைய புது கருவிகளை பயன்படுத்தி இசைக்கோர்வை செய்துள்ளோம். நிச்சயம் இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

    திரை இசையை தேர்தெடுத்தது ஏன்?

    திரை இசையை தேர்தெடுத்தது ஏன்?

    எனக்கு இன்டிவிஜுயல் மியூசிக் செய்ய வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது. ஆனால் முதலில் இந்த வாய்ப்பு கிடைத்தால், இதை பயன்படுத்திக்கொண்டேன். மற்றபடி இசை சார்ந்து எதுவாக இருந்தாலும் அது எனக்கு சந்தோஷம் தான்.

    இந்தத்துறையில் பெண்கள் சாதிப்பது கடினமாயிற்றே...

    இந்தத்துறையில் பெண்கள் சாதிப்பது கடினமாயிற்றே...

    எல்லாத்துறையிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சினிமா என்று வரும்போது பிள்ளைகளை அனுமதிக்க பெற்றோர்கள் தயங்குகிறார்கள். நம் திறமை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி இருந்தாலே மற்ற விஷயங்களை தவிர்த்துவிடலாம். பாதுகாப்பு என்பது நமது வீட்டில் கூட இல்லை. சினிமாத்துறையில் ஆனாதிக்கம் இருப்பது உண்மைதான். அதேவேளையில் எனக்கு வாய்ப்புக் கொடுத்ததும் ஒரு ஆண் தான். இங்கிருக்கும் பல ஆண்கள், சக பெண்களை சகோதரிகளாகவும் பார்க்கிறார்கள். அவர்கள் முன்னேற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். எனவே அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. நன்றி.

    English summary
    The tamil movie Antony is a first of kind Claustrophobic film in India. In this film a 19 years old girl Sivathmika has composed music. In an exclusive interview to oneindia, she has said that music is all to her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X