»   »  அனுவிலிருந்து புவனாவுக்கு!

அனுவிலிருந்து புவனாவுக்கு!

Subscribe to Oneindia Tamil

சூப்பர்டா நாயகி அனு, தனது பெயரை புவனா என்று மாற்றி விட்டார். அத்தோடு அம்மா சம்பூரணத்தின் தயாரிப்பில் கார்த்திக்குடன் சேர்ந்துநடித்த, கலக்கற சந்துரு மூலம் மறு அவதாரத்துக்கு அச்சாரம் இட்டுள்ளார்.

சூப்பர்டா, இதயமே என இரு படங்களில் நடித்தவர் அனு. கிளாமர் உடல் வாகு, கிறங்க வைக்கும் கவர்ச்சி என முதல் இரு படங்களிலும் சூப்பராகஷோ காட்டினார். இந்த படங்களை அனுவின் கிளாமரைக் கலந்து தாயார் தான் தயாரித்தார்.

ஆனால் அதன் பிறகு அனுவைக் காணவில்லை. இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலை பிளஸ் உடல் காட்டி அசத்தியுள்ளார்கலக்கற சந்துரு படத்தில்.

உண்மையில் இந்தப் படம் ரொம்ப நாளைக்கு முன்பே எடுக்கப்பட்டது. ஆனால் தியேட்டரைப் பார்க்க முடியாமல் சுருண்டு கிடந்த இந்தப் படத்துக்குபுது வாழ்வு கிடைத்து ரிலீஸாகியுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்துள்ளதும் அனுவின் அம்மா சம்பூரணம் தான். தனது பெயரை புவனா என்று மாற்றிய கையோடு புதுப் பட வாய்ப்புகளைப்புடிக்கும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார் புவனா.

பெயரை மாற்றினீர்கள், அம்மாவை ஏன் தயாரிக்க விட்டீர்கள் என்று கேட்டால், வற்புறுத்தி எல்லாம் அம்மா படம் தயாரிக்கவில்லை. அவருக்கும்ரொம்ப நாளாக தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கடைசியில் என்னை வைத்தே படம் தயாரித்து விட்டார். இது சொந்தப் படம் என்பதால் எந்த பிரஷரும் இன்றி, ஃப்ரீயாக நடிக்கலாம். நமக்கேற்றவகையில் கேரக்டரையும் அமைத்துக் கொள்ளலாம்.

மற்ற படங்களில் நடித்தால் கிளாமரை மட்டும் கறந்து விட்டு டம்மி நாயகியாக்கி விடுகிறார்கள். சூப்பர்டா படமும் கூட எங்களது தயாரிப்புதான்.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. அப்போது அவர் பிசியாக இருந்ததால், அவருக்குப் பதில் ராம்கியை (ஞாபகம்இருக்கா, மெட்ராஸ் வெயிலிலும் மப்ளர் போட்டபடியே நடிப்பாரே) ஹீரோவாகப் போட்டு எடுத்தோம். படம் சுமாராக போயிருந்தாலும் கூட நல்லபடம் எடுத்த திருப்தி உள்ளது.

மலையாளத்தில் ஒன் மேன் ஷோ என்ற பெயரில் வந்த காமடிப் படத்தைத்தான் கலக்கற சந்துரு என்ற பெயரில் கார்த்திக் சாரை வைத்து எடுத்தோம்.முன்பு புஸ்ஸென்று இருந்தீர்கள். இப்போது சிக்கென்று இருக்கிறீர்களே?

ஆமா, இப்போ எடையை நன்றாக குறைத்து விட்டேன். அதனால்தான் பார்க்க பளிச்சென, சிக்கென இருக்கிறேன். அப்புறம் கார்த்திக் சாருடன்நடித்த பூரிப்பும் கூடவே சேர்ந்து கொண்டது. அதனால்தான் கலக்கலாக இருக்கிறேன்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? நான் நடிகை ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவே இல்லை (அட, போங்கத்தா, இத்தையேஎத்தனை நாளைக்குத்தான் எல்லோரும் சொல்லிட்டிருப்பீங்க!). படித்து பெரிய அதிகாரியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

நான் என்னுடைய அழகு, திறமை இவற்றைப் பார்த்துத்தான் எனக்கே என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. முயன்று பார்க்கலாமேஎன்று இறங்கினேன், இதோ, இப்போது நானும் ஒரு நாயகி என்றார்.

உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு புவனா ..

இதையேதான் என்னோட தோழிகளும் சொல்வாங்க. என்னோட பெரிய பிளஸ் பாயிண்டே இந்த மயக்கும் சிரிப்புதானாம் (சோலியைக்கொட்டியது போல ஒருவாட்டி சிரித்துக் காண்பித்தார்!). இதுதவிர மேலும் சில பிளஸ் பாயிண்டுகளும் இருக்குது. அதை நானே சொன்னால் எப்படி,நீங்களே பார்த்துச் சொல்லுங்க.

வெளிப் படத்தில் நடித்ததை விட எனது சொந்தப் படத்தில் நான் ஓவர் கிளாமராக நடிப்பதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். கதைக்குத்தகுந்தாற்போலத்தான் கிளாமர் காட்டுகிறேன்.

சினிமா தியேட்டருக்கு வரும் முக்கால்வாசிப் பேர் விடலைப் பசங்கதான். அவ்வையார் மாதிரியா அவங்க முன் தோன்ற முடியும்? தோன்றினால்தான்பார்ப்பார்களா? அதற்காக ஷகீலா ரேஞ்சுக்கும் போக முடியாது.

எனவேதான் ஆபாசம் கலக்காமல், அளவாக, அழகாக கிளாமர் காட்டுகிறேன். அதை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். யாரும் ஆபாசகண்ணோடு என்னை பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். அப்புறம்?

தொடர்ந்து தமிழில்தான் நடிக்கப் போகிறேன். இங்கு நல்ல நடிகை என்ற பெயரை எடுக்க வேண்டும். அப்புறம்தான் பிற மொழிப் படங்கள் என்றார்புவனா.

Read more about: anu changes name to bhuvana
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil