இப்போ வருவது எல்லாம் பாட்டா.. எல்லாமே இங்க்லீஷா இருக்கு.. அனிருத்தை மறைமுகமாக விளாசிய இயக்குநர்!
சென்னை: பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். இதைத்தொடர்ந்து Paanch, Black Friday, Bombay bombings, No Smoking, Return of Hanuman போன்ற திரைப்படங்களை எடுத்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி இயக்குநரான இவர் 'இமைக்கா நொடிகள்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது, இவர் அளித்துள்ள பேட்டியில், இப்போது வரும் பாடல்களை கேட்கவே முடியவில்லை என்று கூறி அனிருத்தை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப், நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் இவரின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதைத்தொடர்ந்து, இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படத்தில், பாசமான அப்பாவும், அதே நேரம் மோசமான வில்லனாகவும் நடித்திருந்தார். அதில், அனுராக் காஷியப்பின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அந்த படம் அனைவரையும் கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது. அந்த படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் விஜய்சேதுபதி தான் என்றும், அவர் தான் 'மகாராஜா' படத்தில் நடிக்க தன்னை ஊக்குவித்தார் என்று பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.

அது ஒரு மோசடி: இந்நிலையில், அனுராக் காஷ்யம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பான் இந்திய படங்கள் என்பதே ஒரு மோசடி. பான் இந்திய படம் எடுப்பதன் நோக்கமே லாபம் சம்பாதிப்பது மட்டும் தான், லாப நோக்கத்திற்காக மட்டுமே பான் இந்திய படம் எடுக்கப்படுகிறது. முன்பு தெலுங்கு சினிமாவில் தான் பான் இந்திய படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது, தமிழ் படமும் இந்த போட்டியில் குதித்துள்ளது. இதனால், தமிழில் வரும் எல்லா பாடல்களும் ஆங்கிலத்தில் " I am coming for you... I am coming for you'' என்று தான் வருகிறது. ஏதோ மேற்கு ராக் இசையைக் கேட்பது போல் இருக்கிறது. இது தமிழ் பாடல்கள் இல்லை. ஒரு காலத்தில் தமிழில் வெளியான ராஜா பாடல்களை கேட்டு நாங்கள் அதை இந்தியில் பயன்படுத்தினோம். ஆனால் இன்று வெளியாகும் பாடல்களில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்கிறது என்று அந்த போட்டியில் அனுராக் காஷ்யம் பேசி உள்ளார்.
உண்மைதான்: இவரின் இந்த போட்டியைப் பார்த்த இணையவாசிகள் இது உண்மை தான், இப்போது வரும் பாடலை கேட்க முடியவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் வெளியான குட் பேட் அக்லி படத்தில், இசையராஜா இசையமைத்த 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபா தாரேன்' என்ற இரண்டு பாடல்கள் இடம் பெற்று இருந்தது. அந்த பாடல் வரும் இடத்தில் எல்லாம் தியேட்டரில் கைதட்டல் பறந்தன. அதே பாடத்தில் வந்த புலி புலி பாடலில் என்ன வார்த்தை வருகிறது என்றே தெரியவில்லை. இதைத்தான் அண்மையில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கங்கை அமரன், 7 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு இசையமைத்தவரின் பாடலுக்கு வராத, கைத்தட்டல் நாங்கள் இசையமைத்த பாடலுக்கு வருகிறது. இதனால் தான் ராயல்டி கேட்கிறோம் என்று பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











