ஹாலிவுட் நடிகர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா? சைலன்ஸ் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் ஸ்பெஷல் பேட்டி!

சென்னை: தெலுங்கில் நிசப்தம் என்றும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் சைலன்ஸ் என்ற டைட்டில் உடன் வெளியாகி உள்ள படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் அளித்துள்ள ஸ்பெஷல் பேட்டி வைரலாகி வருகிறது.

Recommended Video

MICHAEL MADSEN போட்ட CONDITION | CLOSE CALL WITH DIRECTOR HEMANT MADHUKAR PART-01 | FILMIBEAT TAMIL

கமல்ஹாசனின் பேசும் படம் தான் இயக்குநருக்கு சின்ன வயசு இன்ஸ்பிரேஷனாம்.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கி உள்ள இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

நேற்று இரவு 10 மணிக்கு வெளியான அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தை இரவு முழுவதும் தூங்காமல் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை வைத்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குநர் ஏகப்பட்ட தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். முதலில் ஒரு சோதனை முயற்சி படமாகத் தான் இதனை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர்.

மாதவனால் தான்

மாதவனால் தான்

ஆனால், படத்தில் மாதவன் என்டர் ஆனவுடன், அவரை தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் வில்லன் நடிகரான மைக்கேல் மேடிசன் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த புராஜெக்டில் இணைந்தனர் என்றார். மல்டி ஸ்டார் நடிகர்கள் இணைந்ததால், படமும் ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்தது என்றார்.

அனுஷ்காதான் கேமரா

அனுஷ்காதான் கேமரா

ஒரு பேச முடியாத காது கேளாத பெண்ணின் பார்வையில், அவரை சுற்றி என்ன நடந்தாலும், அவருக்கு சத்தமே கேட்காது. வெறும் நிசப்தமாகத் தானே இருக்கும். அனுஷ்கா தான் இந்த படத்தில் கேமராவே, அவரை சுற்றி நடக்கும் திரில்லர் நிகழ்வுகள் தான் படம் என படத்தின் சுவாரஸ்யங்களையும் அழகாக கூறுகிறார். இதுபோன்ற சோதனை முயற்சி படங்கள் சாதனை ஆவதும், சோதனையாவதும் ரசிகர்கள் கையில் என்பது தனிக்கதை.

ஹாலிவுட் நடிகர் போட்ட கண்டிஷன்

ஹாலிவுட் நடிகர் போட்ட கண்டிஷன்

இந்த படத்திற்காக இயக்குநர் டரன்டினோ படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடின்சனை சுமார் 6 மாதங்கள் காத்திருந்து அவரது கால்ஷீட்டை இயக்குநர் வாங்கி உள்ளாராம். மெயிலில் ஸ்க்ரிப்ட் எல்லாம் அனுப்பி அவர் வரும் ஹோட்டலை தேடிக் கண்டுபிடித்து அவரிடம் அனுமதி பெறும் போது அவர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன் என்ன தெரியுமா? இந்திய படங்கள் என்றாலே டான்ஸ் ஆட சொல்வார்கள், என்னை டான்ஸ் எல்லாம் ஆட வைத்து விடாதீர்கள் என்பது தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X