»   »  குளிர் விட்ட அபர்ணா!

குளிர் விட்ட அபர்ணா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபர்ணா நெஞ்சில் அளவற்ற சந்தோஷம் பொங்கிப் பெருகி ஓடி வருகிறதாம். நெஞ்சில் ஜில் ஜில் படம் நஷ்டம்தராத பட வரிசையில் சேர்ந்திருப்பதால்தான்.

லயோலா காலேஜ் கொடுத்த லட்டுப் பொண்ணுதான் அபர்ணா. பரத நாட்டியத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தமுத்துப் பெண்ணான அபர்ணா, தனது அபரிமித அழகை சினிமாவில் நுழைத்துப் பார்க்க ஆசைப்பட்டபுதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நடித்தார்.

அவரது கிளாமர்தான் ரசிக்கப்பட்டதே தவிர படம் போணியாகவில்லை. இதனால் அடுத்தடுத்து படங்களில்நடிப்பதைத் தவிர்த்து வந்தார் அபர்ணா. அவரது பரந்து விரிந்த கவர்ச்சியைத்தான் இயக்குனர்கள் பெரிதாகநினைத்து வந்ததால் அதில் விருப்பம் இல்லாமல் தட்டிக் கழித்து வந்தார் அபர்ணா.

பின்னர் ஏபிசிடி படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்ததால் நடித்தார். அதன் பிறகு ஆளைக் காணவில்லை. இந்தநிலையில் வேறு விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்த அவரை நெஞ்சில் படத்தின் கதை கவர்ந்ததால்அதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

முழுக்க முழுக்க லண்டனிலேயே எடுக்கப்பட்ட இப்படத்திலும் அபர்ணா தனது செழுமையான கவர்ச்சியைகொடுத்து கலக்கியிருந்தார். படமும் சுமாராக ஓடி நஷ்டக் கணக்கிலிருந்து தப்பி விட்டது. இதனால் அபர்ணாவின்அகன்ற நெஞ்சம் மேலும் மலர்ந்து பூ>ப்பாகியுள்ளது.

இனிமேலாவது அடிக்கடி வருவீங்களா (வெள்ளித் திரையில்தான்) என்று அபர்ணாவிடம் கேட்டோம். நெஞ்சில்பட அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. ரொம்ப நல்ல யூனிட். செல்வா திறமையான இயக்குநர். அவரதுபடத்தில் நடித்தது பெருமையாக இருந்தது.

இந்தப் படம் பெரிய அளவுக்கு போகாவிட்டாலும் கூட நல்ல படம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டுள்ளது.அதுவே எனக்கு பரம திருப்தி என்று முகம் மலர்கிறார் அபர்ணா.

ஆமா, நீங்க நடிக்கும் படங்களுக்கு நீங்களே பைனான்ஸ் செய்கிறீர்களாமே என்று கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லப்பா. நான் நடித்த சில படங்களுக்கு பைனான்ஸ் பிரச்சினை வந்தபோது கொடுத்துஉதவினேன். அவ்ளோதான். நான் ஒரு நடிகை, பைனான்சியர் கிடையாது என்று பதறினார்.

அவரே தொடர்ந்து இனிமேல், அதிக படங்களில் நடிக்கப் பாகிறேன். கிளாமராக நடிக்கவும் நான் ரெடி. நான்இன்னும் சின்னப் பொண்ணுதான். இளமை ஊஞ்சலாடும் நான் பாட்டி வேடத்தில் நடிக்க முடியாது. ஸோ, எனதுவயசுக்கேற்ற, கேரக்டருக்கேற்ப கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்று போட்டு தாக்கினார்.

ஒத்தப் பாட்டுக்கு? நிறைய குத்துப் பாட்டுக்கு வாய்ப்பு வருகிறது. என்னைப் பார்த்தால் குத்துப் பாட்டுக்குஆடுபவள் போலவா தெரிகிறது? எனக்கும் அதில் உடன்பாடு இல்லை. எனது உடல் வாகுக்கு ஒத்தப் பாட்டுக்குஆடினால் படு ஆபாசமாக தெரியும், ஸோ, அப்படியெல்லாம் ஆட மாட்டேன் என்று படு வேகமாக மண்டையைஆட்டுகிறார் அபர்ணா.

அப்ப, அபர்ணாவை இனி அடிக்கடி பார்க்கலாம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil