மகன் நடிக்க வேணாம்னு சொல்றான்.. ஜகமே தந்திரம் தியேட்டரில் தான்.. நடிகர் கஜராஜ் பேட்டி!
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜின் பேட்டி இரு பாகங்களாக தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
பீட்ஸா படத்தின் மூலமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகம் ஆனதை போலவே அவரது அப்பாவான கஜராஜும் அந்த படத்தில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார்.

பீட்ஸா, சூதுகவ்வும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முண்டாசுப்பட்டி, கபாலி, ரஜினி முருகன், சண்டக்கோழி 2, வந்தா ராஜாவாதான் வருவேன், ராட்சசன், மனிதன், மீசையை முறுக்கு, அடங்கமறு, சங்கத்தமிழன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து சிறந்த குணசித்திர நடிகராக கலக்கி வருகிறார் கஜராஜ்.
ஆனால், நீங்க நடிக்காதீங்க அப்பா என மகன் கார்த்திக் சுப்புராஜ் முறையிடுவதை கிண்டலாக பேட்டியில் பேசியுள்ளார் கஜராஜ்.
கொரோனா காரணமாக சொந்த ஊரான மதுரையில் இருந்து வரும் கஜராஜ் ஜூம் வீடியோ கால் மூலம் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ள கஜராஜ் அந்த படம் ஒடிடியில் வெளியாகாது என்றும் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











