அஜித் ஓகே சொன்னா போதும் .. கதை ரெடி.. இயக்குனரின் நீண்ட நாள் ஆசை

Recommended Video

முருகதாஸின் சந்திரமுகி 2 | DARBAR SPECIAL INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை : தலை அஜித்தை வைத்து படம் எடுக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது, அவர் ஓகே சொன்னா மட்டும் போதும் என்றார் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக போகும் படம் தான் தர்பார். இந்த படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியாகி எப்போது படம் வரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பிலிமி பீட் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாராஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் .

தர்பார் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது லைகா நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து இருக்கிறார்.

நிவேதா தாமஸ்

இவர்களை தவிரஇந்த படத்தில் யோகி பாபு , சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தர்பார் படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து இருக்கிறார் .படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

 அஜித் சொன்னா போதும்

அஜித் சொன்னா போதும்

அஜித்தை பற்றி பேட்டியில் கேட்ட போது முருகதாஸ் கூறியது , அஜித்தின் தீனா படம் மூலம் தான் உதவி இயக்குனராக இருந்த நான் இயக்குனர் ஆனேன் நானும் அவரும் அடிக்கடி சந்தித்து கொள்வோம், எனக்கு முடியாமல் போன போது கூட அவர் உதவியாளர் மூலம் நலம் விசாரித்து கொண்டார். என்னிடம் அவருக்கான கதை தயாராக இருக்கிறது, அவர் ஓகே சொன்னா மட்டும் போதும் என்றார் முருகதாஸ் .

 தர்பார் கனவு படம்

தர்பார் கனவு படம்

ரஜினியை இயக்க நீண்ட நாட்களாக முருகதாஸ் முயற்சி செய்து வருகிறார் அந்த கனவு தற்போது தர்பார் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது .நீண்ட நாட்களுக்கு பின் ரஜினி போலீஸாக நடித்து இருக்கும் இப்படத்தில் இதுவரை பார்க்காத ரஜினியை பார்கலாம் என்று முருகதாஸ் கூறியிருக்கிறார் .மேலும் ரஜினியின் சந்திரமுகி படத்தின் வேட்டையன் மற்றும் சரவணன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு கதை எழுதினேன் ஆனால் அது சரியாக வராது என்று பின்னர் விட்டுவிட்டேன் என்றும் முருகதாஸ் கூறினார் .

 தர்பார் நடிகர்கள் தேர்வு சிறப்பு

தர்பார் நடிகர்கள் தேர்வு சிறப்பு

தர்பார் படத்தின் நடிகர்களை பற்றி கேட்க பட்ட கேள்வியில், இந்த படத்தில் மிக சிறந்த நடிகர்கள் தேர்வாகி உள்ளனர், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை தவிர்த்து மற்ற நடிகர்கள் அனைத்தும் மராத்திய மேடை நாடக நடிகர்கள் தான் அவர்கள் சிவாஜி அளவுக்கு பிரமாதமாக நடிக்க கூடிய நடிகர்கள் என்று முருகதாஸ் கூறினார்.

 விஜய் மட்டும் தான்

விஜய் மட்டும் தான்

இயக்குனர் முருகதாஸ் முன்னனி நடிகர்களுடன் பணியாற்றிய இயக்குனர் . அவரிடம் நடிகர்கள் பற்றி சில கேள்விகள் ரேபிட் ஃபயர் கேள்விகளாக கேட்கபட்டது. அப்போது , அதிகம் டேக் வாங்காத நடிகர் யார் என்ற கேள்விக்கு விஜய் தான் அதிகம் டேக் வாங்காத நடிகர் என்று முருகதாஸ் கூறினார் .

முருகதாஸ்

முருகதாஸ்

முருகதாஸ் தற்போது தர்பார் படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்தி வருவதால் அடுத்த படத்தை பற்றி அவர் பேசவில்லை. முருகதாஸ் இயக்கிய படங்களில் அதிக சம்பளம் அவருக்கு பெற்று தந்திருக்கும் படம் இது தான். அவர் தமிழகத்தின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் இதனாலே முருகதாஸ் சூப்பர் ஸ்டார் கூட்டணி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தர்பார் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X