Ex wifeக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. அப்படி சொல்லாதீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்த பேட்டி!

சென்னை: இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இயக்குனராக மாறி 'லி மாஸ்' என்கின்ற படத்தை விர்ட்டியுவல் ரியாலிட்டி மூலம் இயக்கியிருக்கிறார். இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், நான் 13 வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறேன் அதே ஸ்கிரீனை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஏன் சினிமா இப்படியே இருக்கிறது வேறு ஏதாவது செய்யலாமே என்று யோசனை தோன்றியது. அந்த நேரத்தில் தான் என்னுடைய நண்பர் ஒருவர் விர்ட்டியுவல் ரியாலிட்டி சில மாற்றம் செய்ய முடியும் என்று என்னிடம் கூறினார். அப்போது, நான் இதைப் பற்றி என்னுடைய முன்னாள் மனைவி சாய்ராவிடம் சொன்னேன். அவர் ஒரு கதையை உருவாக்கி என்னிடம் சொன்னார். ஒரு சின்ன பொண்ணோட அப்பா அம்மாவை கொலை பண்ணிட்டாங்க, அந்த பொண்ணு வாசனையை வைத்து அம்மா, அப்பாவை கொன்றவர்களை கண்டுபிடிப்பது தான்.

AR Rahman interview

அதன் பிறகு, என் ஸ்டுடியோவில் என் மகள், அசிஸ்ட்டுகளை வைத்து டம்மியா படத்தை எடுத்தோம். அப்போதே மனதிற்குள், அட டைரக்ஷன் இவ்வளவு தானா என்ற தைரியம் வந்துவிட்டது. இதற்கு முன் நான் டைரக்ஷன் பண்ணது இல்ல, ஆனால், தியேட்டர் அனுபவம் இருந்தது. இருந்தாலும் இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக ஆக்டிங் ஒர்க் ஷாப், ரைட்டிங் ஒர்க் ஷாப் போய் அனைத்தையும் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டேன். அப்போது தான் என் நண்பர்கள் நீயே பண்ணு என்று சொன்னதால், நானே செய்துவிட்டேன்.

AR Rahman interview

ஏ.ஆர்.ரகுமான்: இதைத்தொடர்ந்து தொகுப்பாளி டிடி, அவர் இசையத்தை மன்னிப்பாயா.. மன்னிப்பாயா.. என்ற பாடலை பற்றி கேட்க, அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும், என் குடும்படம், என் மகன், மகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குறிப்பாக என் முன்னாள் மனைவி சாய்ராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பின் உசுரே நீ தானே பாடல் குறித்து பேசிய அவர், என் உசுரே என ரசிகர்கள் தான், அவர்கள் இல்லை என்றால், என் வண்டி ஓடாது, ஒவ்வொரு ரசிகரும் என்னை குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து அன்பும், ஆதரவும் காட்டுகிறார்கள் என்றார். தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி எடுத்த டிடி பெரிய பாய் பாட்டு யாருக்கு தான் பிடிக்காது என்றார். அப்போது, ரகுமான் சிரித்துக்கொண்டே, பெரிய பாயா... அது எனக்கு பிடிக்கவில்லை, நான் என்ன கசாப்பு கடையா வைத்திருக்கிறேன். சின்ன பாய்... பெரிய பாய்னு அப்படி சொல்லாதீர்கள் என்றார்.

எனக்கு பிடிக்கல: இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். ரோஜா படத்தில் ஆரம்பித்த இவரின் பயணம் தொடர்ந்த கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், , திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்து இருப்பதாக கூறியிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X