சின்னத்திரையில் கலக்கும் அறந்தாங்கி நிஷா.. வெள்ளித்திரையிலும் மின்னுவார்!

சென்னை : மாரி 2 படத்தை தொடர்ந்து அறந்தாங்கி நிஷா பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அறந்தாங்கி நிஷா பல தொலைக்காட்சிகளில் நகைச்சுவை செய்து பிரபலமானவர். இவர் முக்கியமாக விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது சிறந்த நகைச்சுவை திறனை வெளிபடுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதன் பிறகு பல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் பங்கு இருந்து வருகிறது.

Aranthangi nisha interview

தற்போது அறந்தாங்கி நிஷா அடுத்த படியாக தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தொலைகாட்சியிலே வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவருடன் மற்றொரு விஜய் தொலைகாட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான ரக்சன் தொகுத்து வருகிறார். சமீபத்தில் அறந்தாங்கி நிஷா மாரி 2 படத்தில், நல்ல நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

அறந்தாங்கி நிஷாவின் சிறந்த நகைச்சுவை என்றால் தனது குடும்பத்தை பற்றி அவர் அழகாக விவரிப்பார். அதற்கு தொகுப்பாளர்கள் அல்லது நடுவர்கள் நகைச்சுவையான பதில்களை கொடுப்பார்கள். அந்த நிகழ்வு ரசிகர்களின் கைதட்டை அள்ளி விடும்.

Aranthangi nisha interview

அறந்தாங்கி நிஷா பலமுறை தனது கணவன் பற்றி கூறும்போது அதை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அவ்வளவு அழகாக தனது கணவர் இப்படி இப்படி என கூறுவார் அவர் வீட்டில் மனைவி நிஷாவை கிண்டல் செய்யும் விசயத்தை நிஷா மேடையில் கூறி ரசிகர்களின் பாராட்டை வாங்கி விடுவார் .

நீண்ட நாட்கள் யார் அந்த கணவர் என்று எதிர்பார்த்து வந்தனர் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தம்பதி சமீப காலமாக பல பேட்டிகளில் தங்களின் வாழ்க்கை பற்றியும் அதில் நடக்கும் நகைச்சுவை அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Aranthangi nisha interview

பல நேர்காணல்களை பார்க்கும் போது அறந்தாங்கி நிஷா கூறுவது பல விஷயங்கள் உண்மை தான் என்பது போல இருந்தது. அவரது கணவர் மிக அமைதியானவராக இருந்தும் பல நகைச்சுவை சம்பவங்கள் இருவருக்குள் தினந்தோறும் நடக்கும் என்றார்.

அறந்தாங்கி நிஷா படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் .மாரி 2 படத்தில் அவர் செய்த காமெடிகளுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருந்தது . மேலும் பல படங்களில் நிஷா ஒப்பந்தமாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சின்னத்திரையில் மின்னுவது போல வெள்ளித்திரையிலும் இவர் பிரகாசிக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X