அப்ப பீஸ்ட் ட்ரெய்லரில் வருவது உண்மையான மால் இல்லையா?... ஆர்ட் டைரக்டரின் அனுபவம்!

சென்னை : பீஸ்ட் டிரைலரில் வரும் மால் உண்மையான மால் இல்லை என்று ஆர்ட் டைரக்டர் கிரண் கூறியுள்ளார்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சனும் மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் இணைந்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே, செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய கிரண், பீஸ்ட் திரைப்படம் குறித்து பல தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், பீஸ்ட் படத்தின் மொத்த கதையும் ஒரு மாலில் நடப்பதால், ஒரு பெரிய மாலை தேடி அலைந்தோம் அந்த நேரத்தில் கொரோனாவின் பாதிப்பு இருந்ததால் ஷூட்டிங்கை தொடங்க முடியவில்லை. இதையடுத்து, ஜார்ஜியாவில் உள்ள மாலில் ஷூட் பண்ணலாம் என்று பார்த்தோம். ஆனா நம்ம ஊர் ஆட்களை அங்கு கொண்டு செல்லும் போது அது படத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கும் என்பதால் அந்த ஐடியாவை விட்டுவிட்டோம்.

பிரம்மாண்டமான செட்

பிரம்மாண்டமான செட்

அதன் பிறகு மால் செட் போட்டுடலாம்னு முடிவு பண்ணி முதற் கட்ட பணிகளை தொடங்கி முதலில் ஒரு ப்ளோர் மட்டும் செட் போடலாம்னு நினைத்தோம், கடைசியில் மொத்த மாலும் செட் போட்டு விட்டோம். கிட்டத்தட்ட 60 அடிக்கு மேல செட் போட்டோம். பீச் பக்கத்தில் ஒரு ஓபன் பிளேசில் உண்மையான கட்டுமானப்பணி மேற்கொண்டது போல பிரம்மாண்டமாக செட் போட்டோம் என்றார்.

வாயடைந்து போன விஜய்

வாயடைந்து போன விஜய்

இந்த செட் போட மொத்தம் 5மாதம் தேவை ஆனால், கோவிட் பிரச்சனையால ரெண்டுமாசம் வேலை நடக்கவே இல்லை . அதனால் மொத்தம் மூனு மாசத்துல இந்த செட்ட போட்டு முடிச்சோம் என்றார். முறையாக ஒரு பில்டிங் எப்படி கட்டுவோமோ அப்படித்தான் இந்த செட் போடப்பட்டது. இந்த செட்டை பார்த்துவிட்டு விஜய் அப்படியே வாயடைத்து நின்று விட்டார். இதுவரையில் இவ்வளவு பெரிய செட் யாருமே போட்டது இல்லை என்று பெருமையாக கூறியதாக ஆர்ட் டைரக்டர் கூறினார்.

நெல்சனுக்கு நன்றி

நெல்சனுக்கு நன்றி

அனைத்து ஆர்ட் டைரக்டருக்குமே ஒரு பிரம்மாண்டமான படம் பண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இதற்காக நெல்சன் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரம்மாண்டம் அவரால் தான் சாத்தியம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X