twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொருளின் தரம் படைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும்.. டைரி படத்துல ஊட்டி பியூட்டியா இருக்கும்!

    |

    சென்னை: கேமராமேன் அரவிந்த், இயக்குநர் இன்னாசி பாண்டியன், நடிகர் அருள்நிதி ஆகியோருக்கு இடையே நட்பு வட்டம் அருமையாக இருந்தது என்று டைரி படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் கூறியுள்ளார்.

    Recommended Video

    Sha ra, Sonia ,Rudhra | Bus குள்ள மட்டும் தான் ஏகபட்ட Shots| *Interview

    இயக்குநர் இன்னாசிபாண்டியன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படம் டைரி. இப்படத்தில் புதுமுகங்களான மலேசியாவை சேர்ந்த டாக்டர் பவித்ரா, சோனியா, ருத்ரா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

    இந்நிலையில் தயாரிப்பாளர் கதிரேசன், நடிகை பவித்ரா, தனம் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    சேனாபதி ஆன் தி வே...இந்தியன் 2 படத்திற்காக மிரள வைக்கும் கமலின் புதிய லுக் சேனாபதி ஆன் தி வே...இந்தியன் 2 படத்திற்காக மிரள வைக்கும் கமலின் புதிய லுக்

    படைத்தவனுக்கு தரம் தெரியும்

    படைத்தவனுக்கு தரம் தெரியும்

    கேள்வி: தனம், நீங்கள் டைரி படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

    பதில்: ஊட்டியில் டிசம்பர் மாதம் குளிர்காலத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரும்பாலான படப்பிடிப்பு மிட் நைட்டில் நடத்தப்பட்டது. ஜாலியாக பேசிக் கொண்டே படப்பிடிப்பை முடித்து விட்டோம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் ஊட்டியை ரொம்ப பியூட்டியாக காட்டியிருப்போம். இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் தனது குடும்பத்தினருடன் வந்து படப்பிடிப்பின்போது இருந்தார். பொருளின் தரம் படைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல டைரி படத்தின் தரம் தயாரிப்பாளருக்கு நன்றாக தெரியும் என்றார்.

    படப்பிடிப்பின்போது நடிகர் ஷா ரா தொடர்ச்சியாக வசனம் பேசி கலாய்த்து கொண்டிருப்பார். எனக்கு சிரிப்பு வந்து விடும். அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நடித்து முடித்தேன். படப்பிடிப்பு முடிந்தவுடன் நன்றாக பேசுகிறாய் என்று அவரை மனதார பாராட்டியதாக கூறினார்.

    நட்பு வட்டம் அருமை

    நட்பு வட்டம் அருமை

    கேள்வி: தயாரிப்பாளராக இந்த படத்தை நீங்கள் தயாரிக்க என்ன காரணம்?

    பதில்: ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு, இந்த கதையை நான் படமாக்க விரும்பினேன். ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் வரக்கூடிய பஸ்சில் நடைபெறும் கதை. முதலில் பஸ் செட் அமைத்து 25 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். படத்தின் கதையானது 70 சதவீத இரவில் நடப்பவை. அதனால் தான் படப்பிடிப்பை இரவில் ஊட்டியில் நடத்தினோம். கேமராமேன் அரவிந்த், இயக்குநர் இன்னாசி பாண்டியன், நடிகர் அருள்நிதி ஆகியோருக்கு இடையே நட்பு வட்டம் அருமையாக இருந்தது. இப்படமானது குறிப்பிட்ட வயதினரை மட்டும் ஈர்க்கும் படம் கிடையாது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் பேன்டஸி த்ரில்லர் படமாகும். இப்படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் என்றார்.

    ரொம்ப சிரமம்

    ரொம்ப சிரமம்

    கேள்வி: பவித்ரா நீங்கள் இந்த படத்தில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

    பதில்: இந்த படத்தில் நடித்தது என்பது ஈஸி கிடையாது. நான் ரொம்ப சிரமப்பட்டேன். ஏனென்றால் இந்த துறைக்கு நான் புதிதாக வந்துள்ளேன். டைரி படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முதலில் எப்படி நடிக்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இயக்குநர் என்னை அழைத்து, உங்களை முதலில் நீங்கள் போலீஸ் கதாபாத்திரமாக மாறுங்கள். எந்த படத்தையும் பார்த்து நடிக்க வேண்டாம் என்றார். எனக்கு வரக்கூடிய சந்தேகங்களை அவ்வப்போது இயக்குநரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நடித்தேன். அதுமட்டும் இல்லாமல் படத்தின் ஆரம்பத்தில் வரக்கூடிய சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். படம் ரொம்ப அருமையாக வந்துள்ளது என்றார்.

    மொழி என்பது ரிதம்

    மொழி என்பது ரிதம்

    கேள்வி: தனம், நீங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பீர்கள்?

    பதில்: எனது வயதுக்கேற்றபடி கதாபாத்திரங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என்னை பார்த்தவுடன் எல்லோரும் என்னை கோயம்புத்தூர் என்று நினைக்கிறார்கள். எனக்கு சொந்த ஊர் மதுரை. ஆனால் மொழி என்பது ரிதம். மேலும் மொழி மீது ஆர்வம் அதிகம். பழக்கவழக்கத்தின் காரணமாக என்னால் கோயம்புத்தூர் மொழியில் சரளமாக பேச முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், கன்னடம், மலையாளம் மொழிகளில் கூட நடித்துள்ளேன் என்றார்.

    நன்றாக தூங்கி விடுவேன்

    நன்றாக தூங்கி விடுவேன்

    கேள்வி: மலேசியாவிலிருந்து வந்த நீங்கள் படப்பிடிப்பின்போது ஊட்டியை சுற்றி பார்த்தீர்களா?

    பதில்: என்னுடைய 15 வயதில் ஊட்டிக்கு வந்திருக்கிறேன். என் தொடர்பான படப்பிடிப்பு பெரும்பாலும் மாலை 6 மணியிலிருந்து காலை வரை நடைபெறும். பிறகு பகலில் நன்றாக தூங்கி விடுவேன். இவ்வாறு தொடர்ந்து ஷூட்டிங் நடைபெற்றதால் ஊட்டியில் எங்கும் செல்ல வில்லை. இன்னும் சொல்லப்போனால் ஊட்டி வர்க்கி கூட நான் சாப்பிட்டதில்லை. சாக்லேட்டும் சாப்பிட்டதில்லை. அடுத்த முறை வரும்பொழுது, ஊட்டியை சுற்றி பார்க்க வேண்டும் என்றார்.

    டயலாக் பேச முடியவில்லை

    டயலாக் பேச முடியவில்லை

    கேள்வி: படத்தில் உங்களுக்கு அருள்நிதிக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ஏதும் உண்டா?

    பதில்: இந்த கதையானது ரொம்ப சீரியஸானது. இங்கு ரொமான்ஸ்க்கு எனக்கு வேலை கிடையாது. பாடல் காட்சியில் மட்டும் கொஞ்சம் இருக்கும். அப்போது மட்டுமே நான் சிரிப்பேன். கதைக்கு எந்தளவுக்கு ரொமான்ஸ் தேவையோ அந்தளவுக்கு மட்டும் இருக்கும் என்றார். கார் சேசிங் காட்சியில் சிரமப்பட்டேன். வெறும் யூனிபார்மில் மட்டும் நடிக்க வேண்டியதாயிற்று. லெதர் ஜாக்கெட் போடாமல் நடித்தேன். குளிரில் டயலாக் கூட என்னால் பேச முடியவில்லை.

    நல்ல கதையம்சமான படங்கள் தேவை

    கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

    பதில்: இந்த மாதிரியான படங்களில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நல்ல கதையம்சம் கொண்ட எந்த படமாக இருந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு வருகிறேன். தற்போது பீட்சா3 படம் முடிந்து விட்டது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/-g_WBTr0YaA இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். தயாரிப்பாளர் கதிரேசன், நடிகை பவித்ரா, தனம் பல விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..

    English summary
    Arulnidhi Starring Diary Movie Team Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X