twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெற்ற தாய்க்கு ஆபத்தான நிலை,ஷூட்டிங் கேன்சல்...இயக்குநருக்காக அருள்நிதி செய்த காரியம் என்ன தெரியுமா?

    |

    சென்னை:நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் டி.பிளாக் படத்தை இயக்கிவர் எருமைச்சாணி விஜய்.

    யூடியூப் சேனலில் ஒரு வீடியோ அப்லோட் செய்த நிமிடத்திலிருந்து நமக்கு விமர்சனங்கள் வர ஆரம்பித்து விடும். அந்த விமர்சனங்கள் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கு ஒரு காரணம் என்று டி.பிளாக் பட இயக்குநர் "எருமைச்சாணி விஜய்" தெரிவித்தார்.

    எருமைச்சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் வெற்றி பெற்ற விஜய், டி.பிளாக் படம் குறித்தும், நடிகர் அருள்நிதி குறித்தும் சுவாஸ்ரயமான தகவல்களை நமது பிலீம்பீட் சேனலுடன் பகிர்ந்து கொண்டார்.

    நான் இருக்கேன்..போனால் என் தலைதான் போகும்..லிங்குசாமியை நினைத்து நெகிழ்ந்த இயக்குநர் ஷங்கர்!நான் இருக்கேன்..போனால் என் தலைதான் போகும்..லிங்குசாமியை நினைத்து நெகிழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

    உருப்பட மாட்டீங்க

    உருப்பட மாட்டீங்க

    கேள்வி: உங்களது திரைப்பயணம் குறித்து...

    பதில்: நான் பி.எஸ்.ஜி. கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சேன். அப்பொழுது குறிப்பிட்ட சிலர் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சா உருப்பட மாட்டீங்க என்று கூறினார்கள். நான் சொல்கிறேன் விஷூவல் கம்யூனிகேஷன் படியுங்கள். சாதிப்பதற்கு தமிழ் சினிமாத்துறை இருக்கிறது. ஏனென்றால் இங்கு பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருக்கக்கூடிய போஜன் சார், பிச்சாண்டி சார் போன்றவர்கள் பலரை வழி நடத்தி உள்ளார்கள். இன்னும் சொல்ல போனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கோவையில் பி.எஸ்.ஜி.யில் படித்து முடித்தவர்கள் தான். சாதித்து காட்டியவர்கள் என்று சொல்லும் போது கூடுதல் மகிழ்ச்சி.

    கனவு நனவாகியுள்ளது

    கனவு நனவாகியுள்ளது

    என்னுடைய கனவு முதலில் இருந்து இப்போது வரையும் இயக்குநராக ஆக வேண்டும் என்பது தான். எருமைச்சாணி யூடியூப் சேனலில் நடிக்க வந்தது எதிர்பாராமல் நடந்தது. அது என்னவென்றால், ஒரு குறும்படத்திற்காக கேமிராவை வாடகைக்கு எடுத்து வந்தபிறகு, ஹீரோவாக நடிக்கவிருந்தவர் வராததால், வாடகை வீணாகப் போய்விடும் என்று நினைத்து அதில் நான் நடிக்க வேண்டியதாயிற்று. மேலும் அவர் கூறுகையில், டிபிளாக் படம் மூலம் எனது இயக்குநராக வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது என்றார்.

    புதுமுகங்களுக்கு வாய்ப்பு

    புதுமுகங்களுக்கு வாய்ப்பு

    கேள்வி: டிபிளாக் படத்தின் மையக்கருத்து என்ன?

    பதில்: பெண்கள் விடுதியில் நடக்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் டி-பிளாக். இப்படத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குறிப்பாக கதாநாயகியை பாடல்கள் மற்றும் கவர்ச்சிக்கு பயன்படுத்தாமல், படம் முழுவதும் வரும்படி திரைக்கதை அமைத்துள்ளோம். எருமைச்சாணி யூடியூப் சேனலில் நடித்த அனைவருக்கும் இப்படத்தில் வாய்ப்புகள் கொடுத்துள்ளோம். இப்படத்தில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம். குறும்படங்களில் எனக்கு ஜோடியாக நடித்த ஹரிஜா இப்படத்தில் நடிக்கவில்லை. ஏனென்றால் ஹரிஜா கர்ப்பமாக உள்ளார். இனிவரும் படங்களில் அவரைக் கண்டிப்பாகப் பயன்படுத்துவோம் என்றார்.

    அந்த விமர்சனங்கள் தான் காரணம்

    அந்த விமர்சனங்கள் தான் காரணம்

    கேள்வி: யூடியூப் சேனலில் வாழ்க்கையை தொடங்கிய உங்களின் பயணத்தின் வெற்றிக்கு யார் காரணம்?

    பதில்: எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் யூடியூப் சேனல் Subscribers தான். ஒரு திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் அப்படத்திற்கான மதிப்பும் விமர்சனமும் தெரியவரும். ஆனால் யூடியூப் சேனலில் ஒரு விடியோவை அப்லோட் செய்த நிமிடத்திலிருந்து நமக்கு விமர்சனங்கள் வர ஆரம்பித்து விடும். அந்த விமர்சனங்கள் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கு ஒரு காரணம் . இந்த டி.பிளாக் படமானது எருமைச்சாணி Youtube Subscribersக்கு சமர்ப்பணம் செய்யும் படம் என்றார்.

    அழகான கிப்ட்

    அழகான கிப்ட்

    கேள்வி: நடிகர் அருள்நிதி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ஹீரோ அருள்நிதி பற்றி கூற வேண்டுமென்றால், அவர் என் படத்தின் ஹீரோ இல்லை. என்னோட வாழ்க்கையில் அவர் தான் ரியல்டைம் ஹீரோ. எங்கள் யூடியூப் சேனல் குறும்படத்தை பார்த்து விட்டு, எங்களை நம்பி படத்ததில் நடிக்க ஒத்துக் கொண்டார். அவருடைய நம்பிக்கை வீணாகாது என்கிற அளவில் நாங்க இந்த படத்த ரொம்ப முயற்சி எடுத்து செய்திருக்கிறோம். படம் ரொம்ப அருமையா வந்திருக்கு. மேலும் அவர் கூறுகையில், என்னை போன்று உள்ள யூடியூப் சேனல்காரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.தமிழ்த்திரையுலகம் அடுத்தபடிக்கு செல்லும் என்றார் விஜய் .

    ஆபத்தான நிலை

    ஆபத்தான நிலை

    கேள்வி: நடிகர் அருள்நிதி படப்பிடிப்பை கேன்சல் செய்ய என்ன காரணம்?

    பதில்: நடிகர் அருள்நிதி குடும்பம் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நடிகர் அருள்நிதி மற்றவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைச்சா அதை ரொம்ப பொறுப்பாக செய்வார். தன்னால் இயலவில்லை என்றால் கூட, ஆள் வைத்து அதை பாலோஅப் செய்து அந்த உதவியை செய்து முடிப்பார்கள். எனது வாழ்க்கையிலும் இது நடந்தது. டி. பிளாக் படப்பிடிப்பின்போது, எனது அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நான் கிளம்ப வேண்டும். அந்த நேரத்தில் தயாரிப்பாளரிடம் சொல்வதற்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் நடிகர் அருள்நிதி தயாரிப்பாளரிடம் கூறி படப்பிடிப்பை கேன்சல் செய்தார். நான் கிளம்பி சென்றேன்.

    தாய்மை உணர்வு

    பின்பு இரவு நடிகர் அருள்நிதி என்னை தொடர்பு கொண்டபோது, ஆஸ்பத்திரியில் அம்மாவை பார்க்க முடியவில்லை என்று கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில் மருத்துவமனையின் செகரட்டரி உள்பட அனைவரும் வந்து என்னை சந்தித்து, அம்மாவின் உடல்நலம் குறித்து தினமும் வாட்ஸ்அப்பில் நடிகர் அருள்நிதிக்கு தகவல் அனுப்பினர். இந்த மாதிரி தாய்மை உணர்வுடன் உதவி செய்யக்கூடிய குணம் அவருக்கு மட்டுமில்ல, அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. அதனால தான் அவர்கள் குடும்பம் இவ்வளவு பெயரோடும் புகழோடும் இருக்கிறது என்று டி-பிளாக் பட இயக்குநர் விஜய் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=1RWe3QacxMM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம், டி.பிளாக் பட இயக்குநர் விஜய் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Arulnithi helped Director’s Mother who was in serious health condition
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X