twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி வீட்டுக்கு வந்தப்பவும் வாசாமி-ன்னு தான் சொன்னாங்க... எழுத்துலக தம்பதிகள் அருண்பாரதி-பத்மாவதி

    |

    சென்னை :தீபாவளி சரவெடியாக , அண்ணாத்த திரைப்படம் அதிரடியாக வெடித்துக்கொண்டிருக்கிறது.

    முதல் நாள் முதல்காட்சி எத்தனை சிறப்பானதோ, அத்தனை சிறப்பு வாய்ந்தது அண்ணாத்த திரைப்படத்தின் ஓப்பனிங் பாடல் மற்றும் உத்வேக பாடல் . வா சாமி வா என்ற பாடலை எழுதியுள்ளார் பிரபல திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி.

    எழுத்தாளர் பத்மாவதி தற்போது பிரபலமான சீரியல்களில் எழுத்தாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் கலைத்துறையிலுள்ள ஆதர்ச தம்பதிகள்.

    கேரள மாநில தமிழ் பாட புத்தகத்தில் அருண்பாரதியின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இருவரும் நமது ஃபிலிமிபீட் தளத்திற்கு அளித்த சுவாரஸ்யமான தீபாவாளி ட்ரீட் இதோ..

    Annaatthe Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ?Annaatthe Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ?

    வா சாமி வா

    வா சாமி வா

    கேள்வி : சூப்பர் ஸ்டாருக்கு சாங் வாய்ப்பு கிடைச்சத எப்படி ஃபீல் பண்றீங்க ?

    பதில் அருண் : நிஜமாவே ஒரு Blessed ஆ நெனக்கிறேன். வா சாமி வா பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சதுக்கு நிஜமாவே அந்த கடவுளுக்கு நன்றி சொல்றேன். இயக்குனர் சிவா, இமான் இவர்களுக்கும் முதல்ல நன்றிய சொல்லிக்கிறேன். என் எழுத்தின் மீது வைத்த நம்பிக்கை இயக்குனர் சிவா சாருக்கு மிக பெரிய நன்றி . விஸ்வாசம் படத்துல ரெண்டு பாட்டு எழுதிருந்தேன். இப்போ இதுலயும் வாய்ப்பு குடுத்துருக்காரு. ஆனா இவ்வளவு பெரிய வாய்ப்பா அமையும்ன்னு நான் நெனக்கல.

    நிறைய வெரைட்டி

    நிறைய வெரைட்டி

    கேள்வி : முதல்ல ட்யூன் குடுப்பாங்களா? இல்ல லிரிக்ஸ் எழுதிட்டு ட்யூன் போடனுமா?

    அருண் பதில் : ரெண்டுமே கலந்து இருக்கும். விஸ்வாசத்துக்கு எழுதி குடுங்க, ட்யூன் போட்டுக்குறோம்ன்னு சொன்னாங்க. இதுல ட்யூன் வந்துச்சு. அத கேட்டதுமே இது ஹிட்டுடான்னு தோனுச்சு. அந்த அளவு இருந்துச்சு. கூடுதலாவும் சில பல்லவி, சரணம் குடுப்பேன். அண்ணாத்தலயும் Plan A, planB ன்னு பல்லவிகள் வந்துச்சு. அதுக்கும் எழுதி குடுத்தேன். தென்னாடுதான்-ன்னு ஆரம்பிக்கிற ஒரு பல்லவி, "அடி அடி இடி என, சலங்கைகள் ஆடுது சடா சடா", இப்படி நாலஞ்சி பல்லவிகள் எழுதி தர்றது உண்டு. அப்பறம் இதெல்லாம் எழுதிருக்கறத மொத்தமா சொல்வேன். அவங்களுக்கு எதுல்லாம் பிடிக்குமோ எடுத்துக்குவாங்க.

    மனசுக்கு பிடிச்ச வேலை

    மனசுக்கு பிடிச்ச வேலை

    கேள்வி : அருண்பாரதிக்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?

    பத்மாவதி பதில் : வாசிப்பு அவர்கிட்ட உள்ள முக்கியமான பழக்கம். எதாச்சும் ஃப்ரீ டைம் கிடைச்சா , கொஞ்சம் பேசலாமேன்னு பார்த்தா, அவர் ஒரு டைரி, ஒரு புத்தகம் வச்சிருப்பாரு. அங்க படிக்க, இங்க ஹிண்ட் எடுப்பாரு. குழந்தை பிறந்தப்பவும் கூட இப்படி, குழந்தைய பார்த்துகிட்டும், புத்தகங்கள் வாசிப்பாரு. அது ரொம்ப பிடிச்ச விஷயம். திருமணத்துக்கு பிறகு அவருக்கு வேலை இல்லாத சமயத்துல கூட, அவர் தேவைக்கு என் கிட்ட பணம் கேட்டதில்ல. அவருக்கு பிடிச்ச வேலைய நிறைவா பண்ணுவார். சில வேலைகள்ல, ஒரு வருஷம், ஆறு மாசம் தான் இருப்பாரு. பொருளாதார ரீதியிலயும் ஆரம்பத்துல அவ்வளவு போராட்டங்கள் இருந்துச்சு. இப்ப நானும் கலைத்துறைக்கு வந்தாச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து எங்க மனசுக்கு பிடிச்ச மாதிரியான நிறைவான பணிகளோட பயணப்பட்டுகிட்டு இருக்கேன்.

    இத நெனச்சி கூட பாக்கல

    இத நெனச்சி கூட பாக்கல

    கேள்வி : இந்த பாட்டுக்கு கிடைச்ச கிரெடிட் லயே ஹார்ட்ட டச் பண்ண விஷயங்கள் எது?

    அருண் பதில் : ரஜினி ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகிட்டு வீட்டுக்கு வர்றப்ப, லதா ரஜினிகாந்த் அவருக்கு ஆரத்தி எடுக்கறப்ப வா சாமின்னு சொன்னது உண்மையிலேயே நெகிழ வெச்சது . சரியா எல்லார் இடத்துலயும் இது போய் சேர்ந்துருக்குன்னு ஒரு திருப்தி ஆச்சு. இதுக்கு முன்னாடியே பாடல் கேட்ட உடனேயே லதா ரஜினிகாந்த் வாய்ஸ் நோட்ல தன்னோட பாராட்ட சொல்லிருந்தாங்க. மக்கள் எல்லாருக்கும் எல்லார் மனசுக்கும் நெருக்கமான பாட்டா இந்த பாட்டு அமைஞ்சிருக்கறது ரொம்பவே சந்தோஷம்

    என சொல்லி, இருவரும் சேர்ந்து சிலபல பாடல்களை பாடியே இண்டர்வ்யூ நிறைவு செய்தனர்.நிறைய கேள்விகள் இன்னும் நிறைய வித்யாசமான பத்திகள் என்று முழு வீடியோவை பார்த்தால் புரியும் . முழு வீடியோவாக ஃபிலிமிபீட் தமிழ் யூட்யூப் தளத்தில் காணலாம்.

    English summary
    கேரள மாநில தமிழ் பாட புத்தகத்தில் அருண்பாரதியின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் நமது ஃபிலிமிபீட் தளத்திற்கு அளித்த சுவாரஸ்யமான தீபாவாளி ட்ரீட் இதோ.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X