twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி உட்காரும்பொழுது, நாற்காலி உடைந்து விட்டது...பதறி போனேன்,சிந்து என்ன செஞ்சாங்க தெரியுமா ?

    |

    சென்னை : "தவறான சிந்தனை தான் எனக்கு எதிரி" என்று நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்தார்.

    போனிகபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி, ஷிவானி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராகுல் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    மாஸ்டர் மாதிரி இல்லை.. விக்ரம் 100 சதவிகிதம் என்னோட படமா இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் பளீச்! மாஸ்டர் மாதிரி இல்லை.. விக்ரம் 100 சதவிகிதம் என்னோட படமா இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் பளீச்!

    எழுத்தாளர் முக்கியம்

    எழுத்தாளர் முக்கியம்

    கேள்வி: நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் தனியாக ஒரு எழுத்தாளரை உருவாக்க காரணம் என்ன?

    பதில்: நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். பொதுவாக ஸ்கிரிப்ட் எழுதும்போது நாம் ஒருவர் மட்டும் எழுதுவது கிடையாது. ஐந்து, ஆறு பேர் சேர்ந்து தான் எழுதுவது, டிஸ்கஷன் செய்வது வழக்கம். இயக்குநர் வேலை அவற்றை தேர்ந்தெடுப்பது மட்டுமே. ஆனால் இந்த வேலையை ஒருத்தரிடம் பொறுப்பாக கொடுக்கும்பொழுது, அவர் தனது திறமையை நிரூபிப்பதற்காக நன்றாக உழைப்பார். அப்பொழுது நமக்கு நல்ல ஒரு ஸ்கிரிப்ட் கிடைக்கும். நல்லது நடக்கும். என்னோட டிஸ்கஷன் டீம்ல இருக்கிறார் என்பதை விட, இந்த படத்துக்கு நான் "Writer" என்று தமிழரசனை சொல்வது தானே சிறந்தது. நம்முடன் இருப்பவர்களுக்கு நாம் தான் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.

    Irresponsible Idiot ( பொறுப்பற்ற முட்டாளாக ... )

    Irresponsible Idiot ( பொறுப்பற்ற முட்டாளாக ... )

    கேள்வி: நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நீங்கள் கூற விரும்புவது...

    பதில்: சிவகார்த்திகேயனுடன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நான் பணியாற்றும்போது, அருண்ராஜா காமராஜ் ஒரு Irresponsible Idiot ஆக இருந்தேன். ஆனால் இப்போது Responsible மனிதனாக மாறி வருவது போல் தோன்றுகிறது. அப்போதெல்லாம் Fun Loving ஆக இருந்த நேரமும் இருந்தது. இப்போதும் Fun Loving இருக்கு. ஆனால் இப்போது Fun செய்வதற்கான நேரம் இல்லை. தேடல் அதிகமாக இருக்கும்போது Fun குறைந்து விடுகிறது. அப்போதெல்லாம் நாம் எங்கு இருக்கிறோம், என்ன பண்ண போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. அதனால் அப்போது Fun இருந்தது. அடுத்தடுத்த இடத்திற்கு நாம் செல்லும்போது, நம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அப்போது நாம் அதிகமாக உழைப்பை போட வேண்டியிருக்கிறது என்றார். நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது, என்னிடம் எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள். நான் பண்றேன் என்று கூறும்பொழுது எனக்கு ரொம்ப எமோசனலாக இருந்தது. அழுகையே வந்து விட்டது. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகவே நான் நினைக்கிறேன். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறி, என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தபின், அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நான் சந்தோஷப்பட்டேன். எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்றார்.

    குறும்படம் இயக்குவேன்

    குறும்படம் இயக்குவேன்

    கேள்வி: இனிமேல் குறும்படம் இயக்குவீர்களா?

    பதில்: என்ன தான் நான் சினிமாவில் பயணித்தாலும், குறும்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சில விஷயங்களை குறும்படம் மூலம் தான் காட்ட முடியும். 20 நிமிடம், 25 நிமிடம், 50 நிமிடம் போன்ற கால அளவுகளில் குறும்படம் செய்ய வேண்டும். குறிப்பாக சினிமாத்துறையில் உள்ள டெக்னாலஜிகளை பயன்படுத்தி குறும்படம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.

    ஜாதி பார்க்கிற வலி

    ஜாதி பார்க்கிற வலி

    கேள்வி: நெஞ்சுக்கு நீதி படத்தில், உங்களுக்கு பிடித்த வசனம் எது?

    பதில்: நெஞ்சுக்கு நீதி படத்தில், எனக்கு பிடித்த வசனம் - "குமரா, எல்லா ஜாதியிலும் வலி இருக்கு. ஜாதி பார்க்கிறதல வருகின்ற வலி எங்களுக்கு மட்டும் தான் இருக்கு" என்ற வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் படத்தில் நடுவுல நிற்கிறது இல்ல Neutral, நியாயத்தின் பக்கம் நிற்பதே Neutral போன்ற வசனங்களும் பிடிக்கும். இது போன்ற வசனங்கள் உருவாக காரணமாக இருந்த எழுத்தாளர் தமிழரசன் இதில் பணிபுரிந்தது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது.

    ஒதுக்கி வைக்க வேண்டும்

    ஒதுக்கி வைக்க வேண்டும்

    கேள்வி: நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மையக்கருத்து இது தான் என்று எதை சொல்ல விருப்பம் ?

    பதில்: என்னுடைய பார்வை பிரச்சனை குறித்தது அல்ல, அந்த பிரச்சனை தொடர்பான Discussion தான். பிரச்சனையை சினிமாவில் செய்ய வேண்டியது அல்ல. பிரச்சனைகள் வெளியே நிறைய நடக்கிறது. பிரச்சனை குறித்து பேச தான் முற்படுகிறோம். சில பேர் தங்களுடைய ஜாதியை உயர்ந்தது என்றும், மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்றும் கூறுவதே சட்டப்படி தவறு தான். இந்த மாதிரி சிந்தனையில் இருப்பவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று மட்டும் தான் நாம் காட்ட முடியும். எங்க ஜாதிக்காரன் தப்பு பண்ண மாட்டேன். அப்படி தப்பு செய்யும்பட்சத்தில் அவன் எங்க ஜாதியே இல்லை என்று ஒதுக்கி வைத்தால் நான் ஜாதியை ஏற்றுக் கொள்கிறேன். எங்க ஜாதியில் குற்றமே இல்லை. மற்றவர்களை சமமாக தான் நினைக்கிறோம். எங்க ஜாதியில தப்பு செய்தாலும், சட்டத்தின் பிடியில் ஒப்படைப்போம் என்று கூறும்போது சந்தோஷமாக இருக்கும். இது தான் மையக்கருத்து என்று நம்புகிறேன்

    எமோஷனல் க்ரைம்

    எமோஷனல் க்ரைம்

    கேள்வி: Article - 15 படத்தை ரீமேக் பண்ணும் போது, உங்களுக்கு ஏற்பட்ட தடை என்ன?

    பதில்: எமோஷனலுக்கும், சட்டத்திற்கும் இடையே எப்பொழுதும் ஒரு பிரச்சனை நம் நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது. சட்டம் சரியாக இருக்கிறது. ஆனால் அது சரியான நபர்கள் கையில் இல்லை. அதனால் தான் எமோஷனல் க்ரைம் நடக்கிறது. Article - 15 படத்தை தமிழில் ரீமேக் பண்ணும்போது, எனக்கு எதுவும் தடையாக தோன்றவில்லை. அந்த படத்தில் அரசியல் வேற, தமிழகத்தில் நடைபெறும் அரசியல் வேற. அங்கு கம்யூனிட்டி தொடர்பாக குற்றங்கள் அதிகம். குறிப்பாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் உள்ளே போக முடியாத நிலை தான் இருக்கிறது. இங்கு அந்தளவுக்கு பெரும்பான்மையான குற்றங்கள் கிடையாது. ஆனால் குற்றங்கள் குறித்து சிந்தனை இருக்கிறது. சிந்தனையில் வேறுபாடு இருக்கிறது. எப்படிப்பட்ட சிந்தனைக்கு எதிராக நாம் பேசுகிறோம் என்பது தான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நாம் பேசவில்லை, குறிப்பிட்ட சிந்தனைக்கு எதிராகவே நாம் பேசுகிறோம். சிந்தனைத் தான் எதிரி.

    குற்றப்பின்னணியில் ...

    குற்றப்பின்னணியில் ...

    கேள்வி : குமரா கதாபாத்திரம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

    பதில் : நெஞ்சுக்கு நீதி படத்தில் ஹீரோவுக்கு இணையான முக்கியமான பாத்திரத்தை ஆரி செய்திருப்பார். Article - 15 படத்தின் இந்த கதாபாத்திரம் சிறிய அளவில் இருக்கும். ஏனென்றால் அங்கு க்ரைம் அதிகமாக இருக்கும். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நிஜவாழ்க்கையில் மனிதர்கள் அங்கு இருந்தார்கள். இங்கு அந்தளவுக்கு கிடையாது. எனவே ஆரி கதாபாத்திரத்தை குற்றப்பின்னணியில் இணைத்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நாயகன் உதயநிதி ஸ்டாலின், ஆரி கதாபாத்திரத்தை நோக்கி பயணிப்பார்.

    ஆர்ட் டைரக்டர் வினோத் படத்தின் முதலிலும், கிளைமாக்சிலும் வரும் டீக்கடை செட்டை அருமையாக அமைத்திருப்பார். மேலும் நடன இயக்குனர் லீலாவதி, கேமராமேன் தினேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    டம்மி நாற்காலி

    டம்மி நாற்காலி

    கேள்வி: நடிகர் உதயநிதி ஸ்டாலின் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ஆரியும், உதயநிதி ஸ்டாலினும் சந்திக்கும் காட்சியை படமாக்கும்பொழுது, நடந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. அந்த காட்சிக்குரிய நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் டம்மியாக வைத்திருந்தோம். ஹீரோ உட்காரும் அளவிற்கு நாற்காலி வலிமையாக உள்ளதா என்று நான் பரிசோதித்தேன். எல்லாம் சரியாக இருந்தது. காட்சி படமாக்கும்பொழுது, உதயநிதி ஸ்டாலின் நாற்காலியை எடுத்து போட்டு உட்காரும்பொழுது, நாற்காலி உடைந்து விட்டது. கீழே விழுந்து விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் பொறுமையாக இருந்தார். எனது மனைவி சிந்து கூறுகையில், இன்று உதயநிதி ஸ்டாலின் Costume ரொம்ப அருமையாக உள்ளது. எல்லோரும் கண்ணு வைத்து விட்டார்கள். அதனால் இந்த சம்பவம் நடந்து விட்டது என்றார். கண்டிப்பாக அவருக்கு சுத்தி போடணும் என்று பெரிதும் நம்பினாங்க.. வீட்டிற்கு சென்றவுடன் அவரை சுற்றி போட சொல்லுங்கள் என்று நிறைய முறை என்னிடம் கூறினார். நானும் உதயநிதி ஸ்டாலின் மேக்கப்மேனிடம் பட்டும்படாமல் சென்று கூறினேன். இந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் எனக்கு சங்கடமாக இருக்கிறது என்றார். ஆனால் அவர் அதை மிகவும் கேஷுவலாக எடுத்து கொண்டு எங்களை அடுத்த கட்டத்திற்று ஊக்கப்படுத்தி அடுத்த அடுத்த காட்சி பதிவுகளில் மேலும் உற்சாகமாக இருந்தார் என்பது தான் அவருடைய ஸ்பெஷல் தன்மை .

    2021 & எமோஷனல் ஆண்டு

    கேள்வி: உங்கள் மனைவி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: எனது மனைவி சிந்து இன்று உயிரோடு இல்லையென்றாலும், எனது சிந்தனைகள், எனது குறிக்கோள் எதற்கும் இடையூறு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். 2021ம் ஆண்டை பொறுத்துவரை எனக்கு எமோசஷனல் ஆண்டாக இருந்துள்ளது.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/5W8sg2zTg5I இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், இயக்குநர் அருண்ராஜா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Arun Raja kamaraj Shares the Experience of Nenjuku Neethi Movie in an Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X