‘நான் பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறேனா...?’: நடிகை அருந்ததி விளக்கம்

சென்னை: 'தான் பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவது வதந்தி' என விளக்கமளித்துள்ளார் நடிகை அருந்ததி.

துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கத்தில் தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் ஆகியோர் நடித்துள்ள படம், 'தொட்டால் தொடரும்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. அதில், அப்பட நாயகி அருந்தது, இயக்குநர் கேபிள் சங்கர், பட அதிபர் துவார் ஜி.சந்திரசேகர், ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி, எடிட்டர் சாய் அருண், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, வெற்றி, நடிகர்கள் விஜய் ஆனந்த், சிங்கப்பூர் துரைராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் நாக் அவுட் நந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அருந்ததி அளித்த பதில்களாவது:-

முதல்பட தோல்வி....

முதல்பட தோல்வி....

நீங்கள் அனுஷ்காவைப்போல் உயரமாக, அழகாகத்தானே இருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களுக்கு அதிக பட வாய்ப்புகள் வராததற்கு என்ன காரணம்? என்றக் கேள்விக்கு, "நான் முதலில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் எனக்கு புதிய பட வாய்ப்புகள் குறைவாகவே வருகின்றன. வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.

வதந்தி....

வதந்தி....

நீங்கள் ஒரு பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால்தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றும் பேசப்படுகிறதே? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அப்படியெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை. அது வெறும் வதந்தி.'' என இவ்வாறு அருந்ததி பதில் அளித்தார்.

எனது கட்டுப்பாட்டில் இல்லை....

எனது கட்டுப்பாட்டில் இல்லை....

மேற்கண்ட கேள்விக்கு அருந்ததி பதில் சொல்வதற்கு முன்னர், பட இயக்குநர் கேபிள் சங்கர், நிச்சயமாக அருந்ததி எனது கட்டுப்பாட்டில் இல்லை' என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

சென்னையில்....

சென்னையில்....

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்த வெளுத்து கட்டு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமான நடிகை அருந்ததி, அந்த படத்திற்கு பிறகு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் வராததால் தெலுங்கு பட வாய்ப்புக்காக ஐதராபாத்திலேயே தங்கியிருந்தார். சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் அமைந்ததால் தற்போது ஆந்திராவை காலி செய்துவிட்டு சென்னையில் குடியேறி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X