மகளுடன் இணைந்து நடித்த அனுபவம்.. அருண் பாண்டியன் பேட்டி!

சென்னை: கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள படம் 'அன்பிற்கினியாள்'.

மலையாளம் மொழியில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'ஹெலன்' படத்தின் மறு ஆக்கம் தான் அன்பிற்கினியாள்.

இந்த படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர்கள் தங்கள் அனுபவத்தை கூறினர்.

மகள் கீர்த்தி பாண்டியன்

மகள் கீர்த்தி பாண்டியன்

தமிழில் முன்னர் பிரபலமான நடிகரான அருண்பாண்டியன். கடந்த 16 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பின் அருண்பாண்டியன் இப்படத்தில் தந்தையாகவும், அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள். தந்தை-மகள் உறவு சார்ந்த கதையில் உண்மையான தந்தை - மகள் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படத்தின் பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன, அதில் ஆண கட்டி பாடலின் வீடியோ சாங் வெளியாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ டியூபில் வைரலானது.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

அருண் பாண்டியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, "அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். இந்த படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். இந்த படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்".

மக்கள் மேல் நம்பிக்கை

மக்கள் மேல் நம்பிக்கை

கீர்த்தி பாண்டியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, "இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்".

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X