‘ஆர்யா வாலு மட்டுமல்ல.. அவருக்கு மறுபக்கமும் இருக்கிறது’.. சாயிஷா சொல்லும் ரகசியம்!
விளையாட்டுப் பிள்ளையான ஆர்யா, நிஜத்தில் சீரியசானவரும் கூட எனத் தெரிவித்துள்ளார் நடிகை சாயிஷா.
Recommended Video

சென்னை: கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது, அனைவராலும் விளையாட்டுப் பிள்ளையாகக் கூறப்படும் நடிகர் ஆர்யா, எவ்வளவு பொறுப்பானவர் எனத் தெரிந்து கொண்டதாக ஒன்இந்தியாவிற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.
வனமகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சயிஷா, தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார். கார்த்தியின் ஜோடியாக அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. நாளை விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ஜுங்கா படம் ரிலீசாக இருக்கிறது.
இது தவிர அடுத்த வாரம் கஜினிகாந்த் படம் திரைக்கு வருகிறது. இதில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில், கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் நடித்த அனுபவம் குறித்து ஒன் இந்தியாவிற்கு அவர் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆர்யாவின் மறுபக்கம்:
ஆர்யா ஒரு ப்ளே பாய், வாலுப்பையன் என பலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கஜினிகாந்தில் அவருடன் நடித்தபோது எனக்கு அப்படி தோன்றவில்லை. படப்பிடிப்பின் போது ஜாலியாக இருப்பார், அனைவரையும் கிண்டல் செய்வார். ஆனால், அவருடைய மறுப்பக்கத்தைப் பார்த்தால் அவர் மிகவும் சீரியசான மனிதர்.

அர்ப்பணிப்பு:
மிகவும் குடும்பப்பாங்கானவர். விளையாட்டு, பிட்னெஸ், குடும்பம் என அர்ப்பணிப்புடன் இருப்பார். அன்பானவரும் கூட. அவருடன் நடிப்பது வசதியாக இருக்கும்.

சென்னைப் பெண்:
கஜினிகாந்த் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பக்கத்து வீட்டுப்பெண் போன்று இயல்பானது. சென்னையில் வசிக்கும் எந்தவொரு பெண்ணுடனும் என் கதாபாத்திரத்தைப் பொருத்திப் பார்க்க இயலும்" என்றார்.

சூழ்நிலை தான் காரணம்:
ஆபாசப்பட இயக்குநர் எனப் பெயர் பெற்ற, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து' இயக்குநரின் படத்தில் நடித்தது குறித்து கூறுகையில், "அப்படிப்பட்ட படங்கள் தான் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இயக்குநர் இல்லை சந்தோஷ். அப்போதைய சூழ்நிலையால் அப்படத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

கல கல ஷூட்டிங்:
ஆனால், கஜினிகாந்த் அப்படியில்லை. இது தெலுங்கு படத்தின் டப்பிங் என்பதால், நாயகியின் கதாபாத்திரம் குறித்து எனக்குத் தெரியும். அதனால் தைரியமாக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆர்யாவும், சந்தோஷும் ஜாலியாக பழகியதால் ஷூட்டிங் போனதே தெரியவில்லை" என சாயிஷா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications