twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஆங்லோ- இந்தியன் என்பதால்.. எனக்கு கதாப்பாத்திரம் ஈஸியாக இருந்தது.. லைலா குதூகலம்!

    |

    சென்னை: புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸ் வதந்தி. அமோசன் ப்ரைமில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த வெப்சீரிஸை கதை, திரைக்கதை எழுதியுள்ள ஆன்ட்ரூஸ் வசந்த் இயக்கியுள்ளார்.

    சைமன் கிங் இசையமைத்துள்ளார். திலிப் சுப்புராயன், தினேஷ் சுப்புராஜன் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

    புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் லைலா, சஞ்சனா, இயக்குநர் ஆன்ட்ரூஸ் வசந்த் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்! ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்!

    ரசிகர்கள் விரும்புவது கிடையாது

    ரசிகர்கள் விரும்புவது கிடையாது

    கேள்வி: எஸ்.ஜே.சூர்யா, இந்த தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் குறித்து...

    பதில்: இந்த தொடருக்கான சண்டைக்காட்சிகளை சுப்புராயனின் மகன்கள் திலிப் சுப்புராயன், தினேஷ் சுப்புராயன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். திலீப் சுப்புராயன் திறமையானவர். அதிகமான படங்களில் பணியாற்றியவர். கதை எந்த மாதிரியான சூழலில் பயணிக்கிறது என்பதை புரிந்து அதற்கு தகுந்தாற்போல் சண்டைக்காட்சிகளை இப்படத்தில் வடிவமைத்துள்ளார். எதார்த்தமான சண்டைக்காட்சிகள் தான் இடம் பெற்றிருக்கும். ரோப் கட்டி பறக்கும் சண்டைக்காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. தற்பொழுது ரசிகர்கள் இதை விரும்புவதும் கிடையாது. எக்ஸ்மேன் உள்ளிட்ட படங்களில் கான்செப்ட் தொடர்பான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    ஏற்றுக் கொள்வதில்லை

    ஏற்றுக் கொள்வதில்லை

    கேள்வி: எஸ்.ஜே.சூர்யா, வதந்தி வெப்சீரியசில் உங்கள் கதாபாத்திரம் எந்த மாதிரியானது?

    பதில்: நான் முன்பு நடித்த படங்களில் நடித்தது போல் நடித்தால் இயக்குநர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த படத்தில் கதைக்கு என்ன தேவையோ அவற்றை சிறப்பாக செய்துள்ளேன். இயக்குநர் படத்தை எதார்த்தமாக எடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கெட்டவனை, துரத்தி பிடிக்கும் போலீஸ் கதாபாத்திரம். ரொம்ப அருமையாக வந்துள்ளது என்றார்.

    ஆங்கிலோ- இந்தியன் பெண் கதாபாத்திரம்

    ஆங்கிலோ- இந்தியன் பெண் கதாபாத்திரம்

    கேள்வி: லைலா, படத்தின் காஸ்ட்யூம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: படத்திற்கு காஸ்ட்யூமை சுபஸ்ரீ மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் காஸ்ட்யூம் எப்படியிருக்குமோ அப்படியே வடிவமைத்துள்ளார். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை புரிந்துகொண்டு, அருமையாக அவரது பணியை செய்துள்ளார். நான் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வருகிறேன். அப்பெண்ணிற்கு எந்த மாதிரியான காஸ்ட்யூம் இருந்தால் சரியாக இருக்கும் என்று கணித்து, அருமையாக வடிவமைத்துள்ளார் என்றார்.

    Story Teller.

    கேள்வி: ஆன்ட்ரூ, இசையமைப்பாளர் சைமன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இப்படத்திற்கு அருமையாக இமையமைத்துள்ளார். இசையில் அவர் ஒரு Story Teller. கதையை உள்வாங்கிக் கொண்டு இசையில் கதையை நகர்த்தியிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ரீரிக்கார்டிங்கில் தலைசிறந்து விளங்குபவர் இசைஞானி இளையராஜா மட்டுமே. அவருக்கு அடுத்தப்படியாக சைமன் கண்டிப்பாக இருப்பார். என்னவொரு விஷயம் என்றால், அவர் பணிபுரியும் படங்களில் நடிகையுடன் ரொம்ப நெருக்கமாகி விடுவார் என்றார் ஜாலியாக. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/1pAcfFoIAKs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    ‘Vadhanthi’ Web Series, Produced by Pushkar - Gayatri, actor SJ Surya, Laila and Sanjana are rumored to be a web series. The web series airing on Amazon Prime is written and directed by Andrews Vasanth. Producers Pushkar & Gayathri, Actor SJ Surya, Actresses Laila, Sanjana, Director Andrews Vasanth, who participated in the promotion, gave an exclusive interview to our Filmibeat channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X