»   »  ஆசினுக்கு இனிக்காத பொங்கல்!

ஆசினுக்கு இனிக்காத பொங்கல்!

Subscribe to Oneindia Tamil

விஜய், அஜீத், விஷால் ரசிகர்களை விட ஆசின்தான் இந்த பொங்கல் ரிலீஸ் படங்களை ரொம்ப எதிர்பார்த்தார்.வெளியான மூன்று படங்களில் 2 படங்களில்தான் ஆசின்தான் ஹீரோயின். ஆனால் இப்படங்களில் தனதுகேரக்டரை சுருக்கி விட்டதாக சுணக்கமாக, சோகமாக கூறுகிறார் ஆசின்.

போக்கிரியில் விஜய், ஆழ்வாரில் அஜீத் என ஜோடி போட்டு அசத்திய ஆசினுக்கு படத்தில் பெத்த கேரக்டர்எதுவும் கொடுக்காமல் குதறிப் போட்டு விட்டனர் என்பது ஆசினின் வருத்தம். போக்கிரியிலாவது ஆசினைகொஞ்சம் போல நடிக்க வைத்திருந்தார்கள், வசனமும் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் ஆழ்வா>லோ, தாமரை இலை மீது குந்தியிருக்கும் தண்ணீர் போல எதுவுடனும் ஒட்டாத ஒன்றாகஆசினை சுத்த விட்ட வெறுப்பேற்றியுள்ளனர். சுருக்கமாக சொன்னால், இரு படங்களிலும் மசாலாத்தனமானதிரைக்கதை, அதற்கு பயன்படுத்தப்பட்ட கரிவேப்பிலை ஆசின்.

தனது கேரக்டர்களை இப்படிச் சுருக்கி விட்ட ஏமாற்றத்தில் இருந்த ஆசினைப் போனில் பிடித்து துக்கம்விசாரித்தபோது அவரும் புலம்பினார்.

எல்லா மொழிகளிலும் இயக்குநர்கள் ஒரே மாதி>யாகத்தான் இருக்கிறார்கள். கொஞ்சம் கூட வித்தியாசமேஇல்லை. என்னிடம் கதை சொல்லும்போது உங்களது கேரக்டரை அனைவரும் விரும்பி ரசிப்பார்கள். ஆஹா,ஓஹோவென்று கூறுகிறார்கள்.

நிறைய காட்சிகளை ஷூட் செய்து விட்டு படத்தில் பல காட்சிகளை சாப்பிட்டு விடுகிறார்கள். வேண்டும் என்றேஎடுத்து விடுகிறார்கள் இல்லாவிட்டால் லூசுத்தனமாக பாட்டுப் பாடி ஆடும் நாயகியாக காட்டுகிறார்கள்.

ஆனால் முருகதாஸை நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் எனக்கு மறக்கவே முடியாத அற்புதமானகேரக்டரைக் கொடுத்தவர். கஜினியை என்னால் மறக்கவே முடியுமா?

ஆனால் என்ன செய்வது எல்லோருமே முருகதாஸ் மாதிரி இருக்க முடியாது. திரையுலகம் பொதுவாகவேஹீரோக்கள் சார்பானது. அவர்களை வைத்துத்தான் இங்கே படங்கள் வருகின்றன். எனவேதான் நான் எதையும்சகித்துக் கொள்ள மனதளவில் பழகி விட்டேன்.

நம்பர் ஒன்?

அய்யோடா, மறுபடியும் இதே கேள்வியா? நம்பர் ஒன் என்று நிர்ணயிப்பதற்கு உங்களது அளவுகோல் என்ன?ஒரே நேரத்தில், ஒரு நடிகையின் நிறையப் படங்கள் வெளியானால் அவர்தான் நம்பர் ஒன். இன்தப் பொங்கலுக்குநான்தான் நம்பர் ஒன் நாயகி.

ஆனால் அடுத்து தமிழ்ப் புத்தாண்டு வருகிறது. அப்போது த்ரிஷாவிடமே அல்லது பாவனாவிடமோ அல்லதுவேறு யாரிடமோ இந்த நம்பர் ஒன் மாறலாம். ஸோ, நம்பர் ஒன் நிரந்தரம் இல்லை என்று புன்னகை பூத்துபேச்சை முடித்தார் ஆசின்.

Read more about: asins bad patch in kollywood
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil