அஸினின் உணர்ச்சிகள்! உணர்ச்சிவசப்பட்டால்தான் நன்றாக நடிக்க முடியும். அது எனக்கு இயல்பாகவே உள்ளதால் எந்த வேடம் கொடுத்தாலும் அட்டகாசமாக நடித்து விடுவேன்.இப்படிச் சொல்பவர் அஸின்.தமிழ் சினிமாவில் சத்தம் போடாமல் நுழைந்து ஆர்ப்பாட்டமாக நடித்து வருபவர் அஸின். முதல் படமான உள்ளம் கேட்குமே ரொம்ப லேட்டாகவந்தாலும், இன்னும் லேட்டஸ்டாக இருக்கிறார் அஸின்.கேரளாவில் குட்டித் தொழிலதிபராக விளங்கி வரும் அஸின், பை சான்ஸாக நடிக்க வரவில்லையாம், பிடித்துத்தான் நடிக்க வந்தாராம். விஜய், விக்ரம், சூர்யா,அஜீத் என முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார் அஸின்.அவரைப் பிடித்து கொஞ்சம் பேசுங்களேன் என்று கேட்டபோது அஸின் கொட்டியவை ...உடலும், உணர்ச்சியும் பிரிக்க முடியாதவை. இரண்டுமே அழகாகவும், சரியாகவும் இருந்தால்தான் உயிரோட்டமாக இருக்க முடியும். குறிப்பாக ஒரு நடிகர்அல்லது நடிகைக்கு இந்த இரண்டுமே ரொம்ப அவசியம். அது எனக்கு இயல்பாகவே உள்ளது.அதனால்தான் எந்த ரோல் கொடுத்தாலும் என்னால்தூள் கிளப்ப முடிகிறது.முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருவதை என்னால் நம்பவே முடியவில்லை. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு? முதல் படம்வரத் தாமதானாலும் கூட அது வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது சந்தோஷம். அதை விட எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் எனக்குப்பெரும் பெயர் கிடைத்ததை மறக்கவே மாட்டேன்.திரையில் வந்து போவதும், பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுவதும் மட்டும் நடிப்பல்ல (யாரை குட்டுகிறார்?) . கேரக்டரின் உணர்ச்சிகளை அப்படியே நமதுஉடலிலும், முகத்திலும் கொண்டு வந்து கொட்ட வேண்டும். அப்போதுதான் நம்மால் அழகாக நடிக்க முடியும். (காதல் காட்சிகளில் நிஜமாகவே உணர்ச்சிவசப்படுவாராம் அஸின்!)நடிக்கப் பிடிக்கும் அஸினுக்கு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, தேவையில்லாமல் வம்பு பேசுவது, நேரத்தை வீணடிப்பது, கடுமையான வெயில் போன்றசமாச்சாரங்கள் என்றால் ஆகவே ஆகாதம். புத்தகம் படிக்கச் சொன்னால் பசி, தூக்கம் பாராமல் புத்தகமும், கண்ணுமாக உட்கார்ந்திருப்பாராம்.கோலிவுட் எப்படி இருக்கிறது என்று கேட்டால், அய்யோ, ஐ லவ் சென்னை. எங்க கேரளாவையும் எனக்குப் பிடிக்கும். ஆனால் அதை விட சென்னைதான்ரொம்ப ரொம்பப் பிடிக்கும் (அது சரி, டப்பு இங்கேதானே அதிகம் வருது!) கேரளாவில் இருப்பதைப் போலவே இங்கேயும் சகஜமாக இருக்க முடிகிறது.இங்குள்ளவர்கள் வில்லங்கம் இல்லாதவர்கள், அன்பானவர்கள் (சுருக்கமாக இளிச்சவாயர்கள்?) என்னோட கவனமெல்லாம் நல்ல நடிப்பைக் கொடுக்கும் நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும் என்பதுதான், மற்றபடி முன்னணிக்கு வர வேண்டும்,மற்ற நடிகைகளைப் பீட் செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது என்கிறார் அஸின்.சரி, கஜினியில் உங்களை விட நயன்தாராவுக்கு அதிக கிளாமர் காட்சிகள் இருக்கிறதாமே என்று கேட்டு விட்டால், அட்டகாசமான சிரிப்பை நழுவவிட்டபடி, அதனால் என்ன, எனது காட்சிகளில் நான் கலக்கியிருக்கிறேன். நயன்தாரா அவரோட கேரக்டருக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.படம் வந்தால் தெரிந்து விடப் போகிறது என்கிறார் படு கூலாக.வரட்டும், வரட்டும்!

By Staff

உணர்ச்சிவசப்பட்டால்தான் நன்றாக நடிக்க முடியும். அது எனக்கு இயல்பாகவே உள்ளதால் எந்த வேடம் கொடுத்தாலும் அட்டகாசமாக நடித்து விடுவேன்.இப்படிச் சொல்பவர் அஸின்.

தமிழ் சினிமாவில் சத்தம் போடாமல் நுழைந்து ஆர்ப்பாட்டமாக நடித்து வருபவர் அஸின். முதல் படமான உள்ளம் கேட்குமே ரொம்ப லேட்டாகவந்தாலும், இன்னும் லேட்டஸ்டாக இருக்கிறார் அஸின்.

கேரளாவில் குட்டித் தொழிலதிபராக விளங்கி வரும் அஸின், பை சான்ஸாக நடிக்க வரவில்லையாம், பிடித்துத்தான் நடிக்க வந்தாராம். விஜய், விக்ரம், சூர்யா,அஜீத் என முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார் அஸின்.


அவரைப் பிடித்து கொஞ்சம் பேசுங்களேன் என்று கேட்டபோது அஸின் கொட்டியவை ...

உடலும், உணர்ச்சியும் பிரிக்க முடியாதவை. இரண்டுமே அழகாகவும், சரியாகவும் இருந்தால்தான் உயிரோட்டமாக இருக்க முடியும். குறிப்பாக ஒரு நடிகர்அல்லது நடிகைக்கு இந்த இரண்டுமே ரொம்ப அவசியம். அது எனக்கு இயல்பாகவே உள்ளது.அதனால்தான் எந்த ரோல் கொடுத்தாலும் என்னால்தூள் கிளப்ப முடிகிறது.

முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருவதை என்னால் நம்பவே முடியவில்லை. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு? முதல் படம்வரத் தாமதானாலும் கூட அது வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது சந்தோஷம். அதை விட எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மூலம் எனக்குப்பெரும் பெயர் கிடைத்ததை மறக்கவே மாட்டேன்.

திரையில் வந்து போவதும், பாட்டுப் பாடி டான்ஸ் ஆடுவதும் மட்டும் நடிப்பல்ல (யாரை குட்டுகிறார்?) . கேரக்டரின் உணர்ச்சிகளை அப்படியே நமதுஉடலிலும், முகத்திலும் கொண்டு வந்து கொட்ட வேண்டும். அப்போதுதான் நம்மால் அழகாக நடிக்க முடியும். (காதல் காட்சிகளில் நிஜமாகவே உணர்ச்சிவசப்படுவாராம் அஸின்!)

நடிக்கப் பிடிக்கும் அஸினுக்கு தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, தேவையில்லாமல் வம்பு பேசுவது, நேரத்தை வீணடிப்பது, கடுமையான வெயில் போன்றசமாச்சாரங்கள் என்றால் ஆகவே ஆகாதம். புத்தகம் படிக்கச் சொன்னால் பசி, தூக்கம் பாராமல் புத்தகமும், கண்ணுமாக உட்கார்ந்திருப்பாராம்.

கோலிவுட் எப்படி இருக்கிறது என்று கேட்டால், அய்யோ, ஐ லவ் சென்னை. எங்க கேரளாவையும் எனக்குப் பிடிக்கும். ஆனால் அதை விட சென்னைதான்ரொம்ப ரொம்பப் பிடிக்கும் (அது சரி, டப்பு இங்கேதானே அதிகம் வருது!) கேரளாவில் இருப்பதைப் போலவே இங்கேயும் சகஜமாக இருக்க முடிகிறது.இங்குள்ளவர்கள் வில்லங்கம் இல்லாதவர்கள், அன்பானவர்கள் (சுருக்கமாக இளிச்சவாயர்கள்?)


என்னோட கவனமெல்லாம் நல்ல நடிப்பைக் கொடுக்கும் நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும் என்பதுதான், மற்றபடி முன்னணிக்கு வர வேண்டும்,மற்ற நடிகைகளைப் பீட் செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது என்கிறார் அஸின்.

சரி, கஜினியில் உங்களை விட நயன்தாராவுக்கு அதிக கிளாமர் காட்சிகள் இருக்கிறதாமே என்று கேட்டு விட்டால், அட்டகாசமான சிரிப்பை நழுவவிட்டபடி, அதனால் என்ன, எனது காட்சிகளில் நான் கலக்கியிருக்கிறேன். நயன்தாரா அவரோட கேரக்டருக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.படம் வந்தால் தெரிந்து விடப் போகிறது என்கிறார் படு கூலாக.

வரட்டும், வரட்டும்!

More from Filmibeat

Read more about: asin opens her heart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X