நடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்
மும்பை: பாடி மட்டும் போதாது நடிப்பும் வேண்டும் என்று நடிகராக விரும்புபவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் முன்னாள் சாக்லேட் பாயான ரிஷி கபூர்.
இந்தி திரையுலகின் முன்னாள் சாக்லேட் பாயான ரிஷி கபூர் நடிகராக விரும்புபவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பாலிவுட்டில் உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்று பாடியை டெவலப் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
நடிப்புத் திறமையை வளர்ப்பதை விட பாடிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து ரிஷி கபூர் கூறியிருப்பதாவது,

நடிகர்
நடிகராக வேண்டுமானால் ஜிம்மில் சேர வேண்டும் என்று மக்கள் கூறுவதை பார்த்துள்ளேன். எதற்காக ஜிம்மில் சேர வேண்டும்? நடிக்க கற்றுத் தரும் பள்ளியில் அல்லவா சேர வேண்டும். நல்ல இயக்குனரின் படத்தில் வேலை செய்து நல்ல நடிகர்களின் நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

நடிப்பு
நடிகராக விரும்புபவர்களுக்கு கவனிக்கும் திறன் அதிகம் தேவை. நடிகராக ஜிம்முக்கு செல்ல வேண்டும், குதிரையேற கற்றுக் கொள்ள வேண்டும், சண்டை போட கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள் என தெரியவில்லை. சுத்த முட்டாள்தனம்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சனுக்கு எல்லாம் பாடியும் இல்லை, மசில்ஸும் இல்லை. இருப்பினும் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்தி சினிமாவின் மிகப் பெரிய நடிகர் ஆனார்.

நடிகன்
நான் நடிக்க வந்தபோது என்னை லவ்வர் பாயாக தான் பார்த்தார்கள். ஆக்ஷன் ஹீரோக்கள் வெற்றி பெற்ற நேரத்தில் நான் லவ்வர் பாய் ஆனது எனக்கு மைனஸாகிவிட்டது. ஆனால் ஒன்று நடிக்கத் தெரியாவிட்டால் நிலைத்து நிற்க முடியாது என்றார் ரிஷி கபூர். ரிஷி கபூர் வழியில் அவரின் மகன் ரன்பிர் கபூரையும் ரசிகர்கள் லவ்வர் பாயாகவே பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











