தேர்தல் களத்தை ஆட்டம் காட்டும்.. விஜயின் ‘நீட்ச பங்க ராஜயோகம்‘.. யார் அடுத்த 'CM'. ஜோதிடர் ஷெல்வி!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23ந் தேதி) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில்,அரசியலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அவருக்கு 'நீட்ச பங்க ராஜயோகம்" நடப்பதால், விஜயை குறைத்து மதிப்பிடக்கூடாது என பிரபல ஜோதிடல் ஷெல்லி பேசி உள்ளார்.

ஜோதிடர் ஷெல்வி: தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23ந் தேதி) நடைபெற இருக்கும் நிலையில், ஜோதிடர் ஷெல்வி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், விஜய் என அனைவருக்கும் நல்ல நேரமாக தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டிற்கு பிரச்சனையாகவே மாறி இருக்கிறது. இதுவரை 150 கருத்து கணிப்புகள் வந்து இருக்கின்றது. அதில், என்டிஏ கூட்டணி ஜெயிக்கும், திமுக கூட்டணி ஜெயிக்கும் என்கிறார்கள். ஆனால், யாரும் விஜய் ஜெயிப்பார் என்று சொல்லவே இல்லை. ஏன் விஜய் சிஎம் ஆக கூடாதா?

Vijay TN election astrologer Shelvi

சொன்னா புரியாது: நான் கருத்து படிப்பு நடத்தியவர்களை சந்தித்து பேசினேன். அதில், 70% பேர் விஜய்க்கு ஓட்டு அளிக்க இருப்பதாக சொன்னார்கள். விஜயினுடைய டிரெண்டிங் இன்று அனைவரின் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது. இதை நான் இப்போது சொன்னால் புரியாது. மே நான்காம் தேதி பெட்டியை திறக்கும் போது அனைவருக்கும் புரியும். தமிழகத்தின் வெற்றியை கணிக்கும் இடத்தில் விஜய் நிச்சயமாக இருப்பார். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ராசி அப்படி: ஏப்ரல் 14ந் தேதிக்கு முன் இருந்த நிலைமை வேறு இப்போது இருக்கும் நிலைமை வேறு, இப்போ பல அரசியல் கட்சி வேட்பாளர்கள் விஜயை பார்த்து பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் விஜய் 'நீச்ச பங்க ராஜ யோகம்' தான். இந்த யோகத்தால் ஒரு பெண்ணால் பிரச்சனை வரும் என்று சொன்னேன் அதே போல பிரச்சனை வந்துவிட்டது. 'நீச்ச பங்க ராஜ யோகம்' சிலருக்கு 21 வயதில் ஆரம்பிக்கும், சிலருக்கு 36 வயதில், சிலருக்கு 52 வயதில் ஆரம்பிக்கும். அப்போ அந்த யோகம் ஆரம்பித்தாலும் அது கடவுளுக்கு நிகராக வைத்துக்கொள்ளும், விஜயை குறைத்து மதிப்பிடக்கூடாது என ஜோதிடர் ஷெல்வி பேசி உள்ளார்.

நாளை தேர்தல்: வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற்று, முடிவுகள் வெளிவரும் போது இந்த ஆதரவு எந்த அளவிற்கு மாற்றம் கொண்டு வரும் என்பது தெரியவரும். அரசியல் கணிப்புகள் மாறுபட்டு வரும் சூழலில், இறுதி தீர்ப்பை வாக்காளர்களே வழங்க உள்ளனர். மொத்தத்தில், இந்த தேர்தலில் பாரம்பரிய கட்சிகளுடன் புதிய அரசியல் சக்திகளும் போட்டியிடும் நிலையில், கடுமையான போட்டி நிலவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தான் உண்மையான அரசியல் நிலை தெளிவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X