புது கூட்டணி உருவாகலாம்? விஜயின் ஜாதகம் அப்படிப்பட்டது.. ஜோதிடர் ஷெல்வி பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில், 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் மே 4ந் தேதி ( திங்கட்கிழமை) எண்ணப்பட உள்ளது. இந்த சூழலில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி ஆட்சியில் கைப்பற்றும் என்று கூறியிருக்கும் நிலையில், ஜோதிடர் ஷெல்லி தமிழகத்தில் புதிய அணி உருவாகும் என பேட்டியில் பேசி உள்ளார்.
ஜோதிடர் ஷெல்வி: கலாட்டா வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், இதற்கு முன்பே நான் தான் விஜயின் ஜாதகம் குறித்து பேசி இருக்கிறேன். விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொன்னேன். அதே போல வருவதற்கு முன் அவர்கள் அதற்கான வேலைகளை செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றேன். ஏன் என்றால், கடக ராசி திடீரென்று வந்து குதிக்காது.

புதிய அணி: அதன் பின்பும் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலுக்கும் தான் போட்டி. களம் அப்படித்தான் மாறும் என்று சொன்னேன். அதுபோலத்தான் விஜயும் திமுகவிற்கும் எனக்கும்தான் போட்டி என சொல்லி இருக்கிறார். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும்இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் கருத்துக்கணிப்பில் பல ஊடகங்களும் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. திமுக குறைந்த இடங்களை கைப்பற்றினால் அது அதிமுகவுக்கு சாதகமாக ஆகி எடப்பாடி அவர்கள் முதலமைச்சர் ஆவார். அதே அதிமுக குறைந்த இடங்களை கைப்பற்றினால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அல்ல இரண்டு கட்சிகளுமே குறைவான வாக்குகறை பெற்று தவெகவும் ஓரளவிற்கு வாக்குகளை பெற்று இருந்தால் என்.டி.ஏவுடன் கூட்டு சேரலாம். கூட்டு சேரக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா? இவை அனைத்தையும் தீர்மானிக்கும் பொறுப்பு விஜயின் கையில் தான் இருக்கிறது. ஏன் என்றால், விஜய்யின் ஜாதகம் அப்படிப்பட்டது. அப்படி அவருக்கு சாதகமாக எதுவும் விஜய்க்கு அமையாவிட்டாலும், வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் பேசும் பொருளாக விஜய் தான். இருப்பார். ஸ்டாலின், அண்ணாமலை இன்னும் பல தலைவர்கள் எல்லாம் எத்தனையோ கூட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் 14 கூட்டங்களிலேயே ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் இழுத்து இருக்கிறார் என்றார் அவருடைய ஜாதகத்தின் பலம் என்ன என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என ஷெல்வி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications