twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமெடியாக நடிக்க ஆசை... வில்லனாவே கிடைக்குது - அசுரன் வில்லன் ஆடுகளம் நரேன்

    |

    Recommended Video

    தனுஷ் கண்ணை பார்த்து என்னால நடிக்க முடில | ACTOR NAREN | ASURAN MOVIE | DHANUSH | FILMIBEAT TAMIL

    சென்னை: அசுரன் வில்லன் ஆடுகளம் நரேனுக்கு காமெடியாக நடிப்பதுதான் பிடிக்குமாம் ஆனால் கிடைப்பதெல்லாம் சீரியசான அப்பா, வில்லத்தனமான கேரக்டர்கள், விரைப்பான போலீஸ் வேடம்தான். அசுரன் படம் பரபரப்பாக பட்டி தொட்டி எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷ் உடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நரேன். நமது பிலிமிபீட் தமிழ் இணையதளத்திற்கு அவர் தனது திரை உலக அனுபவங்களைப் பற்றியும் அசுரன் படம் பற்றியும் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி அளித்துள்ளார்.

    அசுரன் படத்தின் என்னுடைய நடிப்பை தாணு சார் ரொம்ப பாராட்டினார். ஒரு காட்சியில அமைதியா உட்கார்ந்திருப்பேன் அந்த சீன் எல்லாருக்கும் பிடிச்சது.

    Asuran Actor Aadukalam Naren Exclusive Interview

    அசுரன் படத்தில பஞ்சாயத்து சீன் என்னால தனுஷ் முகம் பார்த்து நடிக்க முடியலை. தனுஷ் முகமே வசனம் பேசும். என்னால் டயலாக் பேச முடியலை. தத்ரூபமாக நடிப்பார். அவருடன் நடிப்பது ரொம்ப சேலஞ்ச்.

    பூமணி எழுதிய வெட்கை நாவல்தான் படத்திற்கு பேஸ்தான். திரைக்கதை மொத்தமாக வேற. நாவலை வைத்து அப்படியே படம் எடுக்க முடியாது. நாவல் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்தை வைத்தே படம் எடுக்கின்றனர்.

    ஹீரோயினுக்கு அப்பா வில்லன் உணர்வு பூர்வமான கதாபாத்திரங்கள் நல்லா ரீச் ஆகுது. கஜினிகாந்த், ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் காமெடியாக நடித்திருப்பேன். காமெடி எனக்கு பிடிச்சது ஆனால் கொடுக்க மாட்றாங்க வில்லனாகவே நடிக்க கதாபாத்திரங்கள் கிடைக்குது.
    என் மூக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அடையாளம் காட்டும். இயக்குநர் சொல்வதை நான் செய்கிறேன். அது ரசிகர்களுக்கு கரெக்டாக ரீச் ஆகிறது.

    பாலுமகேந்திரா சார் பட்டறையில் இருந்து வந்தவன். நான் உங்க முன்னாடி நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்னா இது அவர் எனக்கு கற்றுக்கொடுத்தது.
    அவரை நினைக்காமல் என்னால் இருக்க முடியாது. இப்ப நான் சாப்பிடுற சாப்பாடு அவர் போட்டது அவரை எப்பவுமே மறக்க முடியாது. தகப்பன் ஸ்தானத்தில இருந்து என்னை பார்த்துக்கொண்டார் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் நரேன். 2020ஆம் ஆண்டிலும் நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

    English summary
    Exclusive Interview With Aadukalam Naren for Asuran movie and Dhanush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X