ஹீரோயின் கேரவனுக்குள்ளத்தான் எப்பவுமே இருப்பாரு.. வைபவ் குறித்து ஓபனாக பேசிய அதுல்யா ரவி!

சென்னை: அடுத்த வாரம் தனுஷின் குபேரா படத்துக்கு எல்லாம் எந்தவொரு சின்ன பட்ஜெட் படங்களும் பயப்படாமல் கூடவே ரிலீஸ் ஆகிறோம் என்கிற தைரியத்துடன் வெளியாக முடிவு செய்துள்ளன. ஏற்கனவே அதர்வாவின் 'டி என் ஏ' திரைப்படம் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் ஜூன் 20ம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேஷவ் இணைந்து இயக்கியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தில் வைபவ், சுனில் ரெட்டி, அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Athulya Ravi opens up about Vaibhav spending lot of time in her caravan
Photo Credit:

காமெடி கலாட்டா படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஹீரோயினுடன் இணைந்து புரமோட் செய்த நிலையில், வைபவ் குறித்த ஒரு பக்காவான மேட்டரை அதுல்யா ரவி ஓபன் பண்ண அவரே பதறி போய்விட்டார்.

பெரிய ஹிட் கொடுத்த பெருசு: 2008ம் ஆண்டு வெளியான சரோஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகர் வைபவ் ரெட்டி. கோவா, ஈசன், மங்காத்தா, பிரியாணி, பிரம்மன், டமால் டுமீல், கப்பல், ஆம்பள, மாஸ், சென்னை 600028 பார்ட் 2, மேயாத மான், பேட்ட, சிக்சர் என பல படங்களில் நடித்துள்ளார். மேயாத மான் படத்துக்குப் பிறகு அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இந்த ஆண்டு வெளியான பெருசு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் நல்ல வரவேற்பையும் கொடுத்தது.

தாமதமாகும் ஆலம்பனா: பெருசு படத்துக்கு முன்பாகவே ஆலம்பனா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சென்னை சிட்டி கேங்ஸ்டர் படமே ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. ஆனால், இன்னமும் ஆலம்பனா திரைப்படம் வெளியாக முடியாமல் தவித்து வருகிறது. அடுத்த வாரம் தனுஷின் குபேரா படத்துடன் சென்னை சிட்டி கேங்ஸ்டர் படம் பாக்ஸ் ஆபீஸில் மோதுகிறது.

Athulya Ravi opens up about Vaibhav spending lot of time in her caravan
Photo Credit:

ஹீரோயின் கேரவனுக்குள்ளேயே இருப்பார்: கோவையை சேர்ந்த அதுல்யா ரவிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்து வரும் நிலையில், அடுத்த வாரம் சென்னை சிட்டி கேங்ஸ்டர் படம் வெளியாகிறது. ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ள டீசல் திரைப்படமும் இன்னமும் வெளியாகவில்லை. இந்நிலையில், வைபவ் குறித்து பேசும் போது, ஷூட்டிங்கில் தான் மட்டும் தான் ஒரேயொரு பெண் என்பதால் வைபவ் மட்டுமின்றி மற்ற குழுவினரும் என்னையே சுற்றி வருவார்கள் என்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ரெடியாக கொஞ்ச லேட்டானால், ஒவ்வொருத்தராக வந்து கேரவனுக்குள் கேள்வி கேட்டு செல்வார்கள் என்றார். உடனடியாக வைபவ் ஹீரோயின் கேரவனுக்கு வெளியே வெயிட் பண்ணும் வைபவ்னு சொல்லுங்க என்று அலர்ட் கார்டு போட, அப்படியெல்லாம் இல்லை, ஹீரோயின் கேரவனுக்குள் தான் இருப்பார் என்றே பேசியுள்ளார்.

கை கொடுக்குமா?: பெருசு படத்தை போல இந்த படமும் ஜாலியான படம் தான் என்றும் கடந்த ஆண்டு ரணம் என்கிற படத்தை ரொம்பவே சீரியஸாக பண்ணேன். படம் பார்த்த பலரும், நீங்க காமெடி படமே பண்ணுங்க, அதுதான் நல்லா இருக்கு, நாங்களும் கவலையை மறந்து சிரிக்கணும்னு சொன்னாங்க, அதனால் தான் மீண்டும் காமெடி படம் பண்ணியிருக்கேன் என்றார். இந்த படம் அவருக்கு பெருசு படம் போலவே வெற்றிப் படமாக அமையுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X