கற்பு எங்க இருக்கு? 25 வருஷம் லிவ்-இன்னில் இருந்து பிரிந்த நடிகர் GM குமார் பளிச்!
சென்னை: தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டுமே தங்களுக்கான கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் GM குமார். அடிப்படையில் இயக்குநரான GM குமார், அதன் பின்னர் நடிகராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடித்த படங்களிலேயே இவருக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த படங்களில் ஒன்று இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன். அதேபோல், நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் மிகவும் பயமுறுத்தும் நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படி இருக்கையில் அவரது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ள பல கருத்துக்கள் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, " லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. நானும் எனது பார்ட்னரும் 25 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். அதன் பின்னர் எங்களுக்கு செட் ஆகவில்லை. இருவரும் தார்மீகமாக பிரிந்தோம். இப்போதும் நானும் அவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் இப்போது அமெரிக்காவில் உள்ளார். லிவ் -இன் ரிலேஷன்ஷிப் குறித்து என்னிடத்தில் பலரும் தவறாக பேசி உள்ளார்கள். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மற்றவர்கள் சொன்னதை எல்லாம் நான் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

லிவ் - இன் தான் பெஸ்ட்: முதுகெலும்பு இல்லாத சமூகம் எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருக்கும். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் முட்டாள்தனம் என்று பேசி உள்ளார். அதேபோல் நிர்வாணமாக நடித்தது குறித்து அவர் பேசுகையில், நிர்வாணம் தான் உண்மை. ஆடைகள் பொய். நாம் ஆடைகளுடன் பிறக்கவில்லை.
கற்பு எங்க இருக்கு?: கடவுள் நம்மை ஆடைகளுடன் படைக்கவில்லை. ஆடைகள் தான் மனிதன் செய்யும் முதல் தவறு. ஆடைகள் இருப்பதால் தான் கற்பு என்ற ஒன்றைச் சொல்லுகிறோம். ஆடைகள் இல்லை என்றால் கற்பு இல்லை. அவன் இவன் படத்தில் 15 ஆயிரம் பேர் முன்னிலையில் நான் நிர்வாணமாக நடித்தேன். எனக்கு அதில் தயக்கமே இல்லை. அதுவும் ஒரு அனுபவம் தானே. டிரஸ் இல்லாமல் தானே பிறக்கிறோம், டிரஸ் இல்லாமல் இருக்க வேண்டும், பார்த்து ரசிக்கிறவர்கள் ரசிக்கட்டும், ரசிக்காதவர்கள் போகட்டும் " என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications