சுவிட்சர்லாந்துக்கு சென்று ஒப்பாரி சொல்லிக் கொடுத்தேன்.. ’பாரம்’ ஜெயலக்‌ஷ்மி அம்மா பேட்டி!

Recommended Video

SWITZERLANDக்கு போய் ஒப்பாரி சொல்லி கொடுத்தேன் | BAARAM TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: தேசிய விருது வென்றுள்ள பாரம் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

இந்நிலையில், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுகுமார் சண்முகம் மற்றும் ஜெயலக்‌ஷ்மி அம்மா தமிழ் பிலிம் பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், பாரம் படம் குறித்த பல்வேறு விசயங்களை தெரிவித்துள்ளனர்.

Baaram movie actors interview!

வயதான பெற்றோர்களை பாரமாக நினைத்து பெற்ற பிள்ளைகளே கொலை செய்யும் நெஞ்சை உருக்கும் கதையை படமாக எடுத்து பலரது மனங்களில் பாரத்தை சுமத்தி தேசிய விருது வென்றுள்ள இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி, பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்காமல், நடிப்பு பள்ளியில் தேர்ச்சி பெற்ற புது முகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கன்னட படம் ஒன்றுக்கு கேஸ்டிங் டைரக்டராக இருந்த சுகுமார் சண்முகம், இந்த படத்திற்கு முதலில் கேஸ்டிங் டைரக்டராக ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர், ஒரு கதாபாத்திரத்திற்கு, யாருமே செட் ஆகாத நிலையில், இயக்குநர் பிரியா, நீங்களே பண்ணிடுங்க சுகுமார் எனக் கூறியதும், அந்த முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார் சுகுமாறன்.

மேலும், பாரம் படத்தில் நடித்த, அத்தனை கலைஞர்களையும், தேர்வு செய்து, நடிப்பு பயிற்சியும் இவர் கொடுத்துள்ளார்.

சுகுமாரை தொடர்ந்து, இந்த படத்தில் கொல்லப்படும் தாத்தாவின் தங்கையாக நடித்துள்ளார் ஒப்பாரி பாட்டு புகழ் ஜெயலக்‌ஷ்மி அம்மா.

சுவிட்சர்லாந்து வரை சென்று, ஒப்பாரி பாடலை பிரபலப்படுத்தியுள்ள இவர், பாரம் படத்தில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்ணீர் வரவைத்துள்ளார்.

மேலும், தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்காக நெஞ்சை உருக்கும் ஒப்பாரி பாடல் ஒன்றையும் வீடியோவில் பாடியுள்ளார்.

வெற்றிமாறன் பேனரில் நாளை வெளியாகவுள்ள பாரம், நிச்சயம் தியேட்டர்களில், கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளின் மனங்களை கரைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X