தேசிய விருது பெற்ற பாரம்.. ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்த இயக்குநர்.. எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Recommended Video

NATIONAL AWARD WINNING BAARAM MOVIE DIRECTOR INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: தேசிய விருது பெற்ற பாரம் படத்தை இயக்கிய பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி பாரம் படம் குறித்தும், அதை ரிலீஸ் செய்ய போராடியது குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.

ஆர்த்ரா ஸ்வரூப் மற்றும் பிரியா கிருஷ்ணஸ்வாமி இணைந்து தயாரித்த பாரம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.

Baaram Movie Director Interview!

இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தை வெளியிடுகிறார். கடந்த 2018ம் ஆண்டு உருவாகிய பாரம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், தவித்து வந்த இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமிக்கு, இயக்குநர் ராம் மூலம் கிடைத்த உதவிகளின் படி, விருது விழாக்களுக்கு அனுப்பி, பல விருதுகளை படம் வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, 66வது தேசிய விருது விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருதினையும் பாரம் வென்றுள்ளது.

ஆனால், இந்த படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்ததை பற்றியும், இயக்குநர் வெற்றிமாறனின் அறிமுகம் கிடைத்தது பற்றியும் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மனம் திறந்து பிரியா கிருஷ்ணஸ்வாமி கூறியுள்ளார்.

அசுரன் படத்தின் போது பிஸியாக இருந்த வெற்றிமாறனுக்கு, தான் ஒரே ஒரு மெசேஜ் அனுப்பியதாகவும், அதை அவர் பார்க்கவே இல்லை என்றும், பின்னர், தற்போது, அவர் பேனரில் எப்படி படம் ரிலீசாகிறது என்பது குறித்தும், பேட்டி அளித்துள்ளார்.

வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாமல், தலைகூத்தல் எனும் கொடுமையான முறைப்படி கொல்லும் பழக்கம் இன்னமும் கிராமங்களில் நடந்து வருவதை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

சமீபத்தில் நடந்த பிரஸ்மீட் நிகழ்ச்சியில், இயக்குநர் மிஷ்கின், இந்த படத்தை பார்த்து விட்டு அழுததாகவும், தனது படங்களில் எல்லாம் கதை இல்லை, பாரம் படத்தில் ஜீவன் இருக்கிறது என பேசியது குறிப்பிடத்தக்கது.

பெண் இயக்குநரான பிரியா கிருஷ்ணஸ்வாமி தனியாளாக போராடி பாரம் படத்தை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு திரைக்கு வர போராடியது வரை தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X