பாரம் படத்துல கொடூரமான மகனா நடிச்சவர் இவர் தான்.. சுப. முத்துக்குமார் மற்றும் படக்குழுவினர் பேட்டி!

சென்னை: பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகி தேசிய விருதை வென்ற பாரம் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளனர்.

வரும் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வரவுள்ள பாரம் படத்தை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

கம்மி பட்ஜெட்டில், பாசத்தையும், குடும்ப கஷ்டத்தையும், தலைகூத்தல் முறைப்படி பெற்றோர்களையே பிள்ளைகள் கொல்லும் மோசமான சடங்கு பற்றியும் கன்னத்தில் அறைந்தது போல அற்புதமான படத்தை பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி கொடுத்துள்ளார்.

Baaram movie team interview!

சமீபத்தில், தேசிய விருது பெற்ற பாரம் படத்தை தியேட்டருக்கு கொண்டு வர தான் பட்ட கஷ்டத்தையும், இயக்குநர் வெற்றிமாறன் முன் வந்து ரிலீஸ் செய்ய உள்ளது குறித்தும் தனது பேட்டியில் பிரியா கிருஷ்ணஸ்வாமி விவரமாக பேசி இருந்தார்.

இந்நிலையில், வயதான தந்தையை தலைகூத்தல் முறைப்படி குடும்ப பாரத்தால் கொல்லும் கொடூரமான மகனாக நடித்திருந்த சுப. முத்துக்குமார், அவருடைய தந்தையாக நடித்திருந்த பாண்டிச்சேரி நாடக கல்லூரி பேராசிரியர் ராஜு சார் மற்றும் மாமா கதாபாத்திரத்தில் நடித்த சமண ராஜா உள்ளிட்டோர், பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.

தேசிய விருதுக்காக இந்த படத்தை எடுக்கவில்லை என்றும், வயதான பெற்றோர்களை வீதியில் விட்டு விடுவது, தலைக்கூத்தல் முறைப்படி கொன்று விடுவது போன்ற காரியங்கள் இதற்கு மேலும், நடக்கக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வாக இந்த படத்தை எடுத்துள்ளோம் என்றனர்.

மேலும், வசன காட்சிகளில், இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி, தங்களுக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் இயல்பாக வெளி வந்திருப்பதற்கான காரணம் உள்ளிட்ட பல விஷயங்களை பேசியுள்ளனர். வீடியோவை க்ளிக் செய்து பாரம் படக்குழுவினரின் பேட்டியை கண்டு மகிழுங்கள்.. நெஞ்சை உருக்கும் ஒரு உன்னத தமிழ் சினிமா படைப்பை வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குக்கு சென்று பார்க்க தவறாதீர்கள்..

More from Filmibeat

Read more about: baaram பாரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X