என் ரெண்டாவது பொண்டாட்டி பத்தி தேடுறது எல்லாம் அசிங்கம்.. பாலகிருஷ்ணா அப்படியே தூக்கிட்டாரு - பப்லு!
சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் பிசியான நடிகராக மாறி உள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி அஜித் குமாருடன் அவள் வருவாளா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் பப்லு பிரித்விராஜ். தனது மனைவி பீனாவை விவாகரத்து செய்து பிரிந்த அவர், ஷீத்தல் என்பவருடன் சில ஆண்டுகள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். சமீபத்தில், அவரும் பப்லு பிரித்விராஜை பிரிந்துச் சென்றார்.
இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்துக்குப் பிறகு இந்த ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு அப்பாவாக நடித்த பப்லு பிரித்விராஜ், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படத்தில் ஹீரோயின் ருக்மினி வசந்துக்கு ஸ்டெப் ஃபாதராக நடித்திருந்தார். அந்த படத்தின் மெயின் வில்லனும் அவர் தான்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பப்லு பிரித்விராஜ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது ரெண்டாவது மனைவி யாரென அதிகம் தேடுவதெல்லாம் அசிங்கமான விஷயம் என பேசியுள்ளார்.
சுகர் டேடிக்கு அர்த்தம் தெரியாம பேசுறாங்க: தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற சுகர் பேபி பாடலே முதலில் சுகர் டேடி என்று உருவாக்கப்பட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த பப்லு பிரித்விராஜ், சுகர் டேடிக்கு அர்த்தம் தெரியாமல் பேசி வருகின்றனர். என்னுடன் பழகிய பெண் என்னோட பணத்துக்காக பழகினால் தான் அப்படி விமர்சிக்க வேண்டும். என்னுடைய பர்சனாலிட்டிக்கும், அறிவுக்கும் மயங்கி தான் அவர் பழகினார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், என்னை விட அவர் வசதியானவர் என பேசியுள்ளார்.
அதெல்லாம் ரொம்ப அசிங்கம்: பப்லு பிரித்விராஜின் ரெண்டாவது மனைவி யார் என நெட்டிசன்கள் அதிகம் கூகுளில் தேடுவதெல்லாம் ரொம்பவே அசிங்கமான விஷயம். மற்றவர்களின் பர்சனல் லைஃப்புக்குள் சென்று அதிகம் பார்ப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் இதை விட மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சிம்புவுடன் டிஆர்பி சண்டை: விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில், நடிகர் சிம்புவுக்கும் பப்லு பிரித்விராஜுக்கும் இடையே நடைபெற்ற சண்டை, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்ய போட்ட டிராமா தான் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்றபடி எனக்கும், அவருக்கும் எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை என்றார்.
பாலகிருஷ்ணா அப்படியே தூக்கிட்டாரு: தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் சமரசிம்ஹா ரெட்டி படத்தில் நடித்தேன். அப்போது, நான் 95 கிலோ எடை இருந்தேன். என்னை தூக்கி நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னவுடன் அவர் அப்படியே தூக்கி விட்டார். தூக்கிய பிறகு, எவ்வளவுடா வெயிட்டுன்னு கேட்டாரு, 95 கிலோ என்றதும், டென்ஷனான மனுஷன் அப்படியே தூக்கிட்டு நடந்தார். சார் எப்படி சார் தூக்கினீங்க என்றதும், நான் தூக்கல, சமரசிம்ஹா ரெட்டி தான் தூக்கினார் என்று கேரக்டராகவே மாறிவிட்டார். அவருடன் எல்லாம் நடிக்க வேண்டும் என்றால், ஒரிஜினலாகவே அடிவிழும், அதையெல்லாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ரொம்பவே தங்கமான மனசுக் கொண்டவர் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











