ராதிகா புருஷனா நடிச்சி பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என் லைஃபே போச்சு.. புலம்பிய பப்லு பிரித்விராஜ்!

சென்னை: 58 வயதாகும் நடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் 2வது திருமணம் செய்யப் போவதாக காதலி ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்த நிலையில், அந்த காதலி அவரை விட்டு பிரிந்ததும் ரொம்பவே புலம்பித் தீர்த்தார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகாவின் கணவராக நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன் என்றார்.

1971ம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிரித்விராஜ். தமிழ், தெலுங்கு படங்களில் சிறு வயதில் இருந்தே நடித்து வந்த பப்லு பிரித்விராஜ் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்பது குறித்த வருத்தத்தை 58 வயதிலும் தொடர்ந்து கூறி வருகிறார்.

Babloo Prithviraj Radhika Sarathkumar interview

அஜித்துடன் 'அவள் வருவாளா' படத்தில் எல்லாம் நடித்த நீங்க, ஏன் இன்னும் வளர்ச்சி அடையல, அஜித் எங்கேயோ போயிட்டார் என்றெல்லாம் என்னை பார்ப்பவர்கள் ஏளனமாக பேசி வருகின்றனர். அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை என வருத்தத்துடன் பேசியுள்ளார்.

ரகுவரன் முடியாதுன்னு சொன்னார்: திருநங்கையாக நடிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். ரகுவரனும் நானும் மாமா மச்சான் போல பழகி வந்தோம். உட்லாண்ட்ஸ் தியேட்டர் வாசலில் உட்கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது, திருநங்கை போல நடிக்க வேண்டும் என்கிற என்னுடைய ஆசையை கூறினேன். அதெல்லாம் உனக்கு வராது என்றான். நானும் ஒரு வாரம் முயற்சித்து பார்த்தேன். அப்படி நடிக்கவே வரலை, அதை அவனிடம் சொன்ன போது, அது ரொம்பவே கஷ்டமான விஷயம், நிறைய பயிற்சி தேவை என்றான். அதன் பின்னர் கடுமையாக பயிற்சி பெற்று திருநங்கையாக நடித்துக் காட்டினேன். அதை பார்த்து விட்டு, ஈஸியா உனக்கு வந்துடுச்சேன்னு சொல்லிட்டான் என்றார்.

ராதிகா ஒரு ஒளவையார்: தமிழ் சினிமாவில் ராதிகா ஒரு ஒளவையார். அவருக்கு ஒரு 100 வயசு இருக்குமா? அவருக்கு புருஷனா வாணி ராணி சீரியலில் நடித்தது தான் நான் பண்ணதுலயே பெரிய தப்பு என புலம்பித் தீர்த்து விட்டார் பப்லு பிரித்விராஜ். நானும், ரியாஸ் கானும் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் போது, பார்த்த சிலர் ரியாஸ் கானை பாராட்டி பேசினார்கள். ஆனால், என்னை பார்த்து தாத்தா நடிகர் என கலாய்த்தனர். யாரை பார்த்து தாத்தான்னு சொன்னதாக கேட்டேன், உடனடியாக ராதிகாவுக்கு புருஷனா நடிச்சவன் தானே நீ என அந்த நபர் கமெண்ட் அடித்து விட்டு போய் விட்டார் என்றார்.

24 படம் பண்றேன்: சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் எனக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. தெலுங்கில் 16 படங்கள், தமிழில் 6 படங்கள், இந்தியில் 2 படம், இதுதவிர 3 வெப்சீரிஸ்கள் பண்றேன். வந்த அட்வான்ஸை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டேன். இதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் இனிமேல் செய்யக் கூடாது என்கிற முடிவில் உறுதியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். சீக்கிரமே பப்லு பிரித்விராஜை பல படங்களில் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X