இரண்டு முறை தான் கிஸ் பண்ணினோம்... நடிகை திவ்யபாரதி பரபர!

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் சமீபத்தில் பேச்சுலர் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Recommended Video

Bachelor படம் இந்த Generation Youngters-கு, எல்லாரும் Accept பண்ணாங்க | Divya Bharathi Exclusive

லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் குறித்த இந்த படம் பரவலாக நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்த பல்வேறு விஷயங்களை நடிகை திவ்யபாரதி பில்மி பீட்டிற்காக பகிர்ந்து கொண்டார்.

பேச்சுலர் படம்

பேச்சுலர் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ஆம் தேதி வெளியாகியுள்ள படம் பேச்சுலர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலங்களாக தள்ளிப்போன இந்த படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

நாயகி திவ்யபாரதி

நாயகி திவ்யபாரதி

மேலும் படத்தின் நாயகி திவ்யபாரதியும் முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் குறித்து இந்தப்படம் பேசியுள்ளது. ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர்.

திவ்யபாரதி பேட்டி

திவ்யபாரதி பேட்டி

இந்நிலையில் ஃபிலிமிபீட்டிற்காக இந்த படம் குறித்த தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் நடிகை திவ்யபாரதி.

இரண்டு முத்தக்காட்சிகள்

இரண்டு முத்தக்காட்சிகள்

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் அதிகமான முத்தக்காட்சிகளில் நடித்துள்ளதாக தோன்றும் நிலையில் தாங்கள் இருவரும் இரண்டு முறை மட்டுமே முத்தக்காட்சிகளில் நடித்துள்ளதாக திவ்யபாரதி குறிப்பிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பில் தனக்கு தேவையான உதவிகளை ஜிவி பிரகாஷ் சிறப்பாக செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மாடலிங் மூலம் படவாய்ப்பு

மாடலிங் மூலம் படவாய்ப்பு

மாடலிங் மூலமே இந்த படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் சதீஷ் செல்வகுமார் படம் குறித்து தனக்கு முன்னதாகவே விளக்கியதாகவும் கதைக்கு தேவையான விஷயங்களை தான் படத்தில் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவிதைத்தனமான காட்சிகள்

கவிதைத்தனமான காட்சிகள்

இந்த படத்தின் காட்சிகளை மோசமாக படம் பிடிக்காமல் கவிதை தனமாக எடுத்த தேனி ஈஸ்வர் மற்றும் சதீஷ் அவர்களுக்கு தான் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் திவ்யபாரதி கூறியுள்ளார். தான் படத்தில் கண்கள் மூலமாகவே பல காட்சிகளை வெளிப்படுத்த உதவிய சதீஷ்க்கு அவர் மேலும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கடினமான ரொமாண்டிக் காட்சிகள்

கடினமான ரொமாண்டிக் காட்சிகள்

படத்தில் தனக்கும் ஜிவி பிரகாஷ்க்கும் இடையில் இரண்டு கிஸ் சீன்கள் மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தில் தனக்கு எமோஷன் சீன்களில் நடிப்பது மிகவும் எளிதாக இருந்ததாகவும் ரொமான்டிக் சீன்களில் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தெளிவாக உள்ளனர்

மக்கள் தெளிவாக உள்ளனர்

லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் குறித்து மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான விஷயங்களை அவர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் தன்னுடைய தாய்க்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் தன்னுடைய நடிப்பை அவர் பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

மெனக்கெட்ட சதீஷ்

இந்தப்படத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய பெஸ்ட்ஐ கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் சதீஷ் காஸ்டியூமிற்காக மிகுந்த மெனக்கெடலை இந்த படத்தில் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X