இயக்குநரிடம் கண்கலங்கி அழுத பேச்சுலர் பட நாயகி

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர்.

Recommended Video

GV Prakash ஜோடி Divya Bharathi கண்கலங்கியது ஏன் ? | Bachelor | Filmibeat Tamil

இந்தப் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படத்தின் நாயகி திவ்யபாரதி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பேச்சுலர் படம்

பேச்சுலர் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர். நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார்

இயக்குநர் சதீஷ் செல்வகுமார்

படம் இளைஞர்களுக்கான படம் என்று கூறப்பட்ட நிலையில் இதை படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் மறுத்துள்ளார். குடும்பத்துடன் வந்து பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தன்னுடைய முந்தைய படங்களில் இருந்து மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படத்தின் நாயகனும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாறுப்பட்ட கதைக்களம்

மாறுப்பட்ட கதைக்களம்

மாறுபட்ட கதைக்களமாகவும் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் தலைப்பிற்கேற்றவாறு படத்தில் அதிகமான புதுமுக நடிகர்கள் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாயகி திவ்யபாரதி

நாயகி திவ்யபாரதி

மேலும் படத்தின் நாயகி திவ்யபாரதி ஆரம்பத்தில் பதட்டமாக இருந்ததாகவும் அவர் சிறப்பாக நடிக்க தான் உதவியதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருத்தை செய்தியாளர் சந்திப்பில் பேசிய திவ்யபாரதியும் உறுதிப்படுத்தியுள்ளார். தனக்கு மிகவும் சிறப்பான வகையில் ஜிவி நடிப்பில் உதவியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அழுத்தமான கேரக்டர்

அழுத்தமான கேரக்டர்

மேலும் இந்தக் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது என்றும் மற்றவர்களுக்கு உத்வேகமான கதாபாத்திரம் என்றும் ஆரம்பத்தில் இயக்குநர் கூறியதாகவும் படப்பிடிப்பு துவங்கியவுடன் இதை உணர்ந்து தான் அழுததாகவும் தன்னால் இந்த கதாபாத்திரத்தை செய்ய முடியுமா என்று தயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊக்குவித்த இயக்குநர்

ஊக்குவித்த இயக்குநர்

ஆனால் இயக்குநர் மற்றும் ஜிவி இருவரும் தன்னை ஊக்குவித்ததாகவும் இதேபோல தயாரிப்பாளர் டில்லி பாபுவும் புதுமுகமான தன்னை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளதாகவும் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். டில்லிபாபு நினைத்திருந்தால் இந்த கேரக்டருக்கு வலு சேர்க்கும் வகையில் முன்னணி நாயகியை தேர்வு செய்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் தன்மீது நம்பிக்கை வைத்து தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கண்கலங்கிய நாயகி

செய்தியாளர் சந்திப்பின்போது தொடர்ந்து பேசிய திவ்யபாரதி, இடையில் தன்னுடைய அம்மா குறித்து பேசும்போது கண்கலங்கினார். தன்னை சிங்கிளாக இருந்து சிறப்பாக வளர்த்த அவர் தன்னுடைய வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளதாகவும் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X