வனிதா வாயை திறந்தாலே பொய்.. குடும்பமே ஒதுக்கி வைக்க காரணமே இதுதான்.. பயில்வான் விளாசல்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த 'Mrs & Mr' படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், 'சிவராத்திரி தூக்கம் ஏது' என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து, பேசிய வனிதா, நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியவள், என் மீதே வழக்கா என கண்ணீர் விட்டு பேசி இருந்தார்.
இதுபற்றி, பயில்வான் ரங்கநாதன், Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வனிதா விஜயகுமார் நிறைய பொய்களை சொல்லக்கூடியவர், குடும்ப பிரச்சனை விஷயத்திலும் பொய்களை சொல்லுவார், திருமண விஷயத்திலும் பொய்களை சொல்லுவார், அவர் சொல்லும் பொய்களுக்கு அளவே இல்லை. பீட்டர் பால் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார், அவர் வீடியோ எடிட்டிங் செய்வதற்காக வந்தவர், கடைசியில் அந்த திருமணத்தை பிரமோஷன் என்று சொல்லி அதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

வாய திறந்தாலே பொய்: அதற்கு முன்பாகவே ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார் இருவரும் சேர்ந்து, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற திரைப்படத்தை எடுத்தார்கள். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டார். ஆனால், படம் வெளியான ஒரு வாரத்திலேயே அவரை கழட்டி விட்டு விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற திரைப்படத்தில் ராபர்ட் மாஸ்டரை நடிக்க வைத்தார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட ராபர்ட் வரவே இல்லை. ஏன் ராபர்ட் வரவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு வழக்கம் போல, எங்கள் இருவருக்குள் பிரச்சனை, அது மட்டுமல்லாமல் அவருக்கு என்று தனிப்பட்ட பிரச்சனை இருக்கு என்று, மாற்றி மாற்றி பேசுவது வனிதாவிற்கு ஒன்றும் புதியது இல்ல.
ஆதாரம் இருக்கா: தற்போது தன்னுடைய படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தி இருக்கிறார். அதற்கு அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் நான் இளையராஜாவை சந்தித்து அதற்கான அனுமதி பெற்று விட்டேன் என கூறுகின்றார். அப்படி அனுமதி பெற்று விட்டார் என்றால் அதற்கான கடிதம் இருக்கிறதா? சோனிக் மியூசிக் இடம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறதா? இப்படி எதையுமே வனிதா விஜயகுமார் காட்டவில்லை. அது மட்டுமல்லாமல் சோனி ம்யூசிக்கிற்கும் இளையராஜாவுக்குமே பிரச்சனை இருக்கும் போது சோனி மியூசிக்கிடம் இருந்து எப்படி அவர் அனுமதி பெற்றார்.
அவர் மீது இருக்கும் கோவத்தில்: இதை விட பெரிய பொய் என்னவென்றால் இளையராஜா வீட்டில் தான், நான் வளர்த்தேன், நான் அவர் வீட்டு பொண்ணு என்று சொல்லி இருக்கிறார். மஞ்சுளாவும், விஜயகுமாரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து நிறைய சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது சோற்றிற்காக இளையராஜா வீட்டில் விடுவார்களா? அப்படி வனிதா விஜயகுமாரை வளர்க்கக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவரா இளையராஜா? தம்பி மகன்கள் மீதுதே பெரிய அளவு அன்பு காட்டாதவர் இளையராஜா. அப்படி இருக்கும் போது வனிதாவை மருமகளே என்று சொல்வாரா... பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா... இளையராஜா தன் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதால், அந்த ஆத்திரத்தில் இளையராஜா மீது பழிபோடுகிறாள்.
விஜயகுமார், மஞ்சுளா இருவருமே வனிதாவை தன் மகளே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தின் குடும்பத்தின் மானத்தை வாங்கிவிட்டார். கங்கை அமரனே வனிதா சொல்வது பொய் அது உண்மை இல்லை என்று சொல்லிவிட்டார் இதற்கு மேல் நான் என்ன சொல்வது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











