»   »  நாங்க கட்டி உருளுவோம்.. ஆனா!

நாங்க கட்டி உருளுவோம்.. ஆனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் கடவுள் படத் தயாரிப்பாளர் தேனப்பனுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள், மோதல்கள் சரியாகிவிட்டதாம்.

பாலா இயக்கத்தில் உருவாகும் நான் கடவுள் ஆரம்பத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. முதலில் ஹீரோ அஜீத்துக்கும், பாலாவுக்கும்இடையே பிரச்சினை கிளம்பியது. பெரும் சர்ச்சை கிளம்பியதைத் தொடர்ந்து அஜீத்தை தூக்கி விட்டு ஆர்யாவை ஹீரோவாக்கினார் பாலா.

இதையடுத்து அஜீத்தை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து மிரட்டி அட்வான்ஸாக தந்த காசை பறித்தார் தேனப்பன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக சரணின் வட்டாரம் படத்திலிருந்து விலக முயன்றார் ஆர்யா. ஆனால் சரண் போட்ட கிடுக்கிப் பிடியால் அந்தப்படத்தை முடித்துக் கொடுத்தார்.

ஒரு வழியாக சிக்கல் தீர்ந்து பாவ்னா, ஆர்யா நடிக்க நான் கடவுள் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென ஆர்யா மீது பாலாவுக்கு திருப்திஇல்லை என்றும் இதனால் விக்ரமை அணுகியுள்ளார் என்றும் பேச்சு கிளம்பியது. பின்னர் இது அடங்கியது.

முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத் தயாரிப்பாளர் தேனப்பனுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சினை என்றும் தேனப்பன்தயாரிப்பிலிருந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் கசிந்தன.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால்இப்போது பிரச்சினை தீர்ந்து இருவரும் ராசியாகி விட்டார்களாம்.

இருவருக்கும் பிரச்சினை என்று செய்தி வந்தபோது ஒரு குரூப் அதைக் கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டதாம். அவர்கள் பாலாவின் நல்லபடங்களை விரும்பாத கும்பல் என்பதால் தேனப்பன், பாலா மோதல் அவர்கள் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்ததாம்.

இருவருக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் முயற்சிகள் மேற்கொண்டது. இந்தக்கூட்டத்தில் தேனப்பனும், பாலாவும் கலந்து கொண்டனர். அங்கு மனம் விட்டுப் பேசிய இருவரும் பிரச்சினைகளை சரி செய்து கொண்டார்களாம்.

இதையடுத்து 2வது கட்டப் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்குகிறதாம். பாலாவை ஒரு பட விழாவின்போது சந்திக்க நேர்ந்தபோது என்னப்பிரச்சினை என்று பாலாவை நோண்டினோம்.

பாலா டென்ஷன் ஆவார் என்று பார்த்தால் படு கேஷுவலாக பேசினார். நான் கடவுள் தொடக்க விழா பத்திரிக்கையாளர் கூட்டத்திலேயே நான்தெளிவாக சொல்லியுள்ளேன். அதை தயவு செய்து ரீவைண்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

படப்பிடிப்புக்கு இடையே பிரச்சினைகள் வரும், போகும். தேனப்பனை நான் பல காலமாக அறிவேன். எனக்கு அவரைத் தெரியும், அவருக்கும்என்னை ரொம்ப நன்றாகவேத் தெரியும்.

இருவரும் சண்டை போட்டுக் கொள்வோம், ஏன் கட்டி உருளவும் கூட செய்வோம். ஆனால் படப்பிடிப்பு நடக்கும். குறித்த நேரத்தில் படம் வெளிவரும். பாலா அப்படித்தான் என்று படு ஜாலியாக பேசினார் பாலா.

எப்படியோ, பிரச்சினை தீர்ந்து, கடவுளைக் கண்ணில் காட்டினால் சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil