»   »  பாலாவின் சுயரூபம்! இயக்குனர் பாலாவின் உண்மையான சுயரூபம் இப்போதுதான் வெளிச்சத்திற்குவந்துள்ளது என்று அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் வி.ஏ. துரைகூறியுள்ளார்.பாலாவின் பிதாமகன் படத்தைத் தயாரித்தவர் துரை. படத்தை முடிப்பதற்குள் பல்வேறுபிரச்சினைகள் உருவாகின. தயாரிப்பாளர் துரைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாககூறப்பட்டது.இதனால் விக்ரம் தனது சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுக்க முன் வந்தார். இந்தப்படத்தின்போது விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையே கூட பிரச்சினை எழுந்தது.இந் நிலையில் தற்போது நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்த அஜீத் விலகியவிவகாரத்தில் பாலா சிக்கியுள்ளார். அஜீத்தை ஹோட்டலில் அடைத்து வைத்து, ஆள்வைத்து மிரட்டியதாக பாலா மீது புகார் எழுந்துள்ளது.இந் நிலையில் பாலா குறித்து தயாரிப்பாளர் துரை கருத்து தெரிவித்துள்ளார். அவர்கூறுகையில்,பிதாமகன் படத்தின்போது நான் பாலா குறித்து கூறிய புகார்களை யாருமேநம்பவில்லை. இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாலாவின்உண்மையான குணம் உலகுக்குத் தெரிந்து விட்டது.அவரை வைத்துப் படம் எடுத்த யாருமே நன்றாக இல்லை. சேது படம் மூலம்பாலாவுக்கு அடையாளம் கொடுத்தவர் தயாரிப்பாளர் கந்தசாமி. இன்று படமேதயாரிக்க முடியாத அளவுக்கு நொடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.பிதாமகன் படத்தை எடுத்த நானும் இப்போது நல்ல நிலையில் இல்லை. அதற்குமுன்பு நந்தா படத்தை எடுத்தவர்களும் இன்று நன்றாக இல்லை.நான் எடுத்த படம் தேசிய விருது பெற்றாலும் கூட நான் நன்றாக இல்லையே?சிரமத்தில்தானே இருக்கிறேன்?எங்களை வைத்து வளர்ந்த பாலா உண்மையில் உதவும் மணப்பான்மைகொண்டவராக இருந்தால் எனக்கோ அல்லது கந்தசாமிக்கோதான் படத்தைத் தயாரிக்கவாய்ப்பளித்திருக்க வேண்டும்.பாலாவின் பெயரில் படம் தயாரிக்க நீதிமன்றத்தில் தடை உள்ளது. இதனால்தான்பினாமி பெயரில் (கலைப்புலி தாணுவின் பேனரில்) மாயாவி படத்தைத் தயாரித்துவெளியிட்டார் பாலா.இப்போது அஜீத் விவகாரத்தில் பாலாவின் நிஜமான முகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேலாவது அவரை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்துரை.

பாலாவின் சுயரூபம்! இயக்குனர் பாலாவின் உண்மையான சுயரூபம் இப்போதுதான் வெளிச்சத்திற்குவந்துள்ளது என்று அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் வி.ஏ. துரைகூறியுள்ளார்.பாலாவின் பிதாமகன் படத்தைத் தயாரித்தவர் துரை. படத்தை முடிப்பதற்குள் பல்வேறுபிரச்சினைகள் உருவாகின. தயாரிப்பாளர் துரைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாககூறப்பட்டது.இதனால் விக்ரம் தனது சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுக்க முன் வந்தார். இந்தப்படத்தின்போது விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையே கூட பிரச்சினை எழுந்தது.இந் நிலையில் தற்போது நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்த அஜீத் விலகியவிவகாரத்தில் பாலா சிக்கியுள்ளார். அஜீத்தை ஹோட்டலில் அடைத்து வைத்து, ஆள்வைத்து மிரட்டியதாக பாலா மீது புகார் எழுந்துள்ளது.இந் நிலையில் பாலா குறித்து தயாரிப்பாளர் துரை கருத்து தெரிவித்துள்ளார். அவர்கூறுகையில்,பிதாமகன் படத்தின்போது நான் பாலா குறித்து கூறிய புகார்களை யாருமேநம்பவில்லை. இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாலாவின்உண்மையான குணம் உலகுக்குத் தெரிந்து விட்டது.அவரை வைத்துப் படம் எடுத்த யாருமே நன்றாக இல்லை. சேது படம் மூலம்பாலாவுக்கு அடையாளம் கொடுத்தவர் தயாரிப்பாளர் கந்தசாமி. இன்று படமேதயாரிக்க முடியாத அளவுக்கு நொடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.பிதாமகன் படத்தை எடுத்த நானும் இப்போது நல்ல நிலையில் இல்லை. அதற்குமுன்பு நந்தா படத்தை எடுத்தவர்களும் இன்று நன்றாக இல்லை.நான் எடுத்த படம் தேசிய விருது பெற்றாலும் கூட நான் நன்றாக இல்லையே?சிரமத்தில்தானே இருக்கிறேன்?எங்களை வைத்து வளர்ந்த பாலா உண்மையில் உதவும் மணப்பான்மைகொண்டவராக இருந்தால் எனக்கோ அல்லது கந்தசாமிக்கோதான் படத்தைத் தயாரிக்கவாய்ப்பளித்திருக்க வேண்டும்.பாலாவின் பெயரில் படம் தயாரிக்க நீதிமன்றத்தில் தடை உள்ளது. இதனால்தான்பினாமி பெயரில் (கலைப்புலி தாணுவின் பேனரில்) மாயாவி படத்தைத் தயாரித்துவெளியிட்டார் பாலா.இப்போது அஜீத் விவகாரத்தில் பாலாவின் நிஜமான முகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேலாவது அவரை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்துரை.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாலாவின் உண்மையான சுயரூபம் இப்போதுதான் வெளிச்சத்திற்குவந்துள்ளது என்று அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் வி.ஏ. துரைகூறியுள்ளார்.


பாலாவின் பிதாமகன் படத்தைத் தயாரித்தவர் துரை. படத்தை முடிப்பதற்குள் பல்வேறுபிரச்சினைகள் உருவாகின. தயாரிப்பாளர் துரைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாககூறப்பட்டது.

இதனால் விக்ரம் தனது சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுக்க முன் வந்தார். இந்தப்படத்தின்போது விக்ரமுக்கும், பாலாவுக்கும் இடையே கூட பிரச்சினை எழுந்தது.

இந் நிலையில் தற்போது நான் கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்த அஜீத் விலகியவிவகாரத்தில் பாலா சிக்கியுள்ளார். அஜீத்தை ஹோட்டலில் அடைத்து வைத்து, ஆள்வைத்து மிரட்டியதாக பாலா மீது புகார் எழுந்துள்ளது.

இந் நிலையில் பாலா குறித்து தயாரிப்பாளர் துரை கருத்து தெரிவித்துள்ளார். அவர்கூறுகையில்,

பிதாமகன் படத்தின்போது நான் பாலா குறித்து கூறிய புகார்களை யாருமேநம்பவில்லை. இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாலாவின்உண்மையான குணம் உலகுக்குத் தெரிந்து விட்டது.

அவரை வைத்துப் படம் எடுத்த யாருமே நன்றாக இல்லை. சேது படம் மூலம்பாலாவுக்கு அடையாளம் கொடுத்தவர் தயாரிப்பாளர் கந்தசாமி. இன்று படமேதயாரிக்க முடியாத அளவுக்கு நொடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.

பிதாமகன் படத்தை எடுத்த நானும் இப்போது நல்ல நிலையில் இல்லை. அதற்குமுன்பு நந்தா படத்தை எடுத்தவர்களும் இன்று நன்றாக இல்லை.

நான் எடுத்த படம் தேசிய விருது பெற்றாலும் கூட நான் நன்றாக இல்லையே?சிரமத்தில்தானே இருக்கிறேன்?


எங்களை வைத்து வளர்ந்த பாலா உண்மையில் உதவும் மணப்பான்மைகொண்டவராக இருந்தால் எனக்கோ அல்லது கந்தசாமிக்கோதான் படத்தைத் தயாரிக்கவாய்ப்பளித்திருக்க வேண்டும்.

பாலாவின் பெயரில் படம் தயாரிக்க நீதிமன்றத்தில் தடை உள்ளது. இதனால்தான்பினாமி பெயரில் (கலைப்புலி தாணுவின் பேனரில்) மாயாவி படத்தைத் தயாரித்துவெளியிட்டார் பாலா.

இப்போது அஜீத் விவகாரத்தில் பாலாவின் நிஜமான முகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேலாவது அவரை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்துரை.

Read more about: producer durai attacks bala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil