அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை

சென்னை : பொங்கலையொட்டி புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி தொடர் அமேசான் பிரைமில் வெளியானது.

இதன் முந்தைய பாகம் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இந்த தொடர் வெளியாகியுள்ளது.

இதில் முகக்கவச முத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன்.

புத்தம் புது காலை விடியாதா தொடர்

புத்தம் புது காலை விடியாதா தொடர்

புத்தம் புது காலை என்ற பெயரில் வெளியான ஆந்தாலஜி தொடருக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது புத்தம் புது காலை விடியாதா என்ற ஆந்தாலஜி தொடர் அமேசான் பிரைமில் பொங்கலையொட்டி வெளியாகியுள்ளது.

5 படங்கள்

5 படங்கள்

இதில் 5 படங்கள் இடம்பெற்றுள்ளன. நோய் தொற்று காலகட்டத்தையொட்டி இந்தக் கதைகள் உருவாகியுள்ளன. இதில் ஐஸ்வர்யா லஷ்மி, அர்ஜுன் தாஸ, கௌரி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோ மோல் ஜோஸ், நதியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

 6 பாடல்கள்

6 பாடல்கள்

ஜிவி பிரகாஷ் இசையில் டைட்டில் பாடல் அமைக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த ஆந்தாலஜியின் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையையும் பாலாஜி மோகன், ஹலீதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆன்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

 முகக்கவச முத்தம்

முகக்கவச முத்தம்

இதில் முகக்கவச முத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன். இந்நிலையில் பிலிமிபீட் நேயர்களுக்காக இந்தப் படத்தின் அனுபவம் குறித்து பாலாஜி மோகன் மற்றும் நடிகர் டீஜே ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

பொருத்தமான டைட்டில்

இந்தப் படத்திற்கு டைட்டில் மிகவும் பொருத்தமாக அமைந்ததாக பாலாஜி மோகன் குறிப்பிட்டுள்ளார். கோவிட் கட்டுப்பாடுகளை தாண்டி நாம் நமது அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். லாக்டவுனில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை படம் கூறுவதாக படத்தின் நாயகன் தெரிவித்துள்ளார்.

 அஜித்தின் பெரிய ரசிகன்

அஜித்தின் பெரிய ரசிகன்

அஜித் படம் ரிலீசாகியிருந்தால் தான் கண்டிப்பாக சென்று பார்த்திருப்பேன் என்றும் தான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்றும் பாலாஜி மேலும் கூறினார். மாரி, மாரி 2 படங்களை இயக்கியுள்ள பாலாஜி, 3வது பாகத்தை எடுக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X