சுந்தர் சி டெப்பாசிட் வாங்குவாரா? குஷ்புவின் பிளான்.. பாலாஜி பிரபு பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி அதிமுக - பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.
அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. ஏசி சண்முகத்தினுடைய புதிய நீதி கட்சியில் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சண்முகம் வேலூரில் எம்பி தேர்தலில் நின்றபோது பிரச்சாரத்திற்கு சுந்தர் சி சென்று பிரச்சாரம் செய்தார். ஆனால், சுந்தர் சிக்கும் அரசியலுக்கும் என்ன சம்மதம் என்று தெரியவில்லை.

சுந்தர் சி போட்டி: அவர் அரண்மனை, கலகலப்பு என கலகலப்பான கமர்சியல் படங்களை எடுக்கக்கூடியவர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கக்கூடியவர். இவர் காலகட்டத்தில் வந்த அனைத்து இயக்குநர்களும் பீல்ட் அவுட் ஆகிவிட்டார்கள். ஆனால், தற்போது கூட நயன்தாராவை வைத்து மூக்குத்திஅம்மன் 2 படத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார். இன்றும் சுந்தர் சி வெற்றிப்பட இயக்குநராகத்தான் இருக்கிறார். அப்படி எடுக்கக்கூடியவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என தெரியவில்லை. சுந்தர் சியின் பெயர் அறிவித்த பிறகு இவருக்கு அரசியலுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை என பலர் கேட்கிறார்கள்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: ஆனால், இரண்டு, மூன்று மாதத்திற்கு முன் மதுரையில் நடைபெற்ற வ.ஊ.சிதம்பரனாரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுந்தர் சி, தனது பெயர் சுந்தர் சிதம்பரம் பிள்ளை என அழுத்தி சொல்லி இருந்தார். இதுவரையில் எந்தவிதமான அரசியல் கருத்தையும் போசாத சுந்தர் சி முதன் முறையாக மதுரையில் அப்படி பேசி இருந்தார். அதே நேரம் மதுரை மத்தி தொகுதியில் திமுக வேட்பாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிற்கிறார்கள் என்றால் மக்கள் அவர்களுக்குத்தான் ஓட்டுபோடுவார்கள். அந்த தொகுதி அவர்களின் கோட்டை அவரும் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர் தான். இப்படி ஆளுமையானவரை எதிர்த்து எப்படி சுந்தர் சி போட்டி இருகிறார் என்பது தெரியவில்லை.
குஷ்புவின் திட்டம்: குஷ்பு பிஜேபியில் இருக்கும் போது சுந்தர் சியை ஏன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று தெரியவில்லை. இதில், குஷ்புவின் திட்டம் என்னவாக இருக்கும் என்றால், கணவர் அதிமுகவில் போட்டியிடுவதன் மூலம் அனைத்து கட்சியிலும் நமக்கு செல்வாக்கு இருக்கும் என நினைக்கிறார் என அந்த பேட்டியில் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











