கொரோனா வைரஸ் மட்டும் மேட் இன் சைனாவா இருந்தா.. இயக்குநர் சக்தி சிதம்பரம் அசத்தல் பேட்டி!

சென்னை: சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தனது வீட்டில் இருந்த சீனப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய இயக்குநர் சக்தி சிதம்பரம், அது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | DIRECTOR SAKTHI CHIDAMBARAM CHAT |எல்லா சினிமாக்காரனும் இத பண்ணனும் | FILMIBEAT TAMIL

இந்தியா - சீனா இடையே சமீபத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டை மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியது.

Ban China products: Director Sakthi Chidambaram interview!

தமிழக வீரர் பழனி உட்பட இந்திய வீரர்கள் 20 பேரை அத்துமீறி தாக்கிக் கொன்ற சீன படையினருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

மேலும், டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷங்களும் எழுந்தன.

இந்நிலையில், தனது வீட்டில் இருந்த சீன பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய இயக்குநர் சக்தி சிதம்பரம் அதுதொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், சீனாவின் அத்துமீறர்கள் குறித்தும், கொரோனா பரவல் குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.

மேலும், கொரோனா மேட் இன் சைனா என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அப்படியென்றால், அது சீக்கிரமே போய் விடும், சீன பொருட்கள் எதுவுமே நீடித்து நிலைக்காது என கலாய்த்துள்ளார்.

சக்தி சிதம்பரம் இயக்கி வரும் பேய் மாமா படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டு, யோகி பாபு நடித்து வரும் நிலையில், அவருக்கும் மற்றும் படக் குழுவினருக்கும் போன் செய்து, நீங்களும் உங்களிடம் உள்ள சீனப் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் உணர்ச்சிகரமான முழு பேட்டியையும் காண வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X