twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவத்துறையில இப்படியெல்லாமா நடக்குது? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க... 'பேட்டரி' இயக்குனர் திடுக்

    By
    |

    சென்னை: மருத்துவத் துறைக்குள் நடக்கும் முறைகேடுகளை பேச வருகிறது 'பேட்டரி'. ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன பரபரப்பாக.

    படத்தின் இயக்குனர் மணிபாரதி, ஏற்கனவே ஷாம், ஷாமிலி நடித்த 'அன்பே அன்பே' படத்தை இயக்கியவர். ஏவி.எம் தயாரித்த படம் இது.

    டைரக்டர்கள் வசந்த், மணிரத்னம், சரண் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிபாரதி, இயக்குனர்கள் லிங்குசாமி, ஹரி ஆகியோரிடம் கதை விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.

     ஷாக் ஆகற மாதிரி

    ஷாக் ஆகற மாதிரி

    'பேட்டரி'யில் என்ன சொல்ல போகிறார்? ''நம்ம மக்கள் தொகைல மூன்றில் ஒரு பங்கு, ஏழைகள்தான்னு சொல்றாங்க. அதுல வறுமை கோட்டுக்கு கீழே வாழறவங்களுக்கு மருத்துவம்தான் பெரும் சவால். சின்ன நோய்னு ஆஸ்பத்திரி போனா கூட, அவங்க கேட்கிற பீஸே நமக்கு நோயை கொண்டு வந்துரும். இப்படி இருக்கிற சூழல்ல, இங்க இப்படியெல் லாமா நடக்குது? ன்னு ஷாக் ஆகற மாதிரி ஒரு விஷயம் கேள்விபட்டா, எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட படம்தான் 'பேட்டரி' என்கிறார் மணிபாரதி.

     அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    இந்தப் படத்தில் செங்குட்டுவன் ஹீரோவாக நடிக்கிறார். அசுரன் அம்மு அபிராமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், யோக் ஜேப்பி, கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜ்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாதையன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசை.

     நூல் பிடிச்சுப் போனா

    நூல் பிடிச்சுப் போனா

    அப்படி என்ன ஷாக் கொடுக்க போறீங்க, படத்துல?

    நான் ஷாக் கொடுக்கலை. நடக்கிற விஷயங்களை சொல்றோம். மருத்துவ துறையில நடக்கிற முறைகேட்டால் ஒரு குடும்பம் திடீர்னு பாதிக்கப்படுது. எப்படி இது நடந்ததுன்னு விசாரிக்க நூல் பிடிச்சுப் போனா, அதுக்கு பின்னால அவ்வளவு பெரிய விஷயம் நடக்குது. அது என்னங்கறதுதான் கதை. படத்தை பார்த்தா ஒவ்வொருத்தரும் கதையோட தங்களை இணைச்சுக்க முடியும். இது கிரைம் திரில்லர் படம்.

     பிளான் பண்ணின மர்டர்

    பிளான் பண்ணின மர்டர்

    நிறைய கிரைம் திரில்லர் படங்கள் வந்தாச்சு... நீங்க எப்படி சொல்ல போறீங்க?

    மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதோட கதையும் திரைக்கதையும் வேற மாதிரி இருக்கும். திடீர் திடீர்னு சில கொலைகள் நடக்குது. எந்த தடயமும் இல்லை. பக்காவா பிளான் பண்ணின மர்டர். யார் இதை பண்றதுன்னு போலீஸ் தேடுது. ஒரு தடயமும் இல்லாம எப்படி கண்டுபிடிக்கிறாங்க அப்படிங்கற திரைக்கதை புதுசா இருக்கும்.
    அதுக்காக நாங்க வச்சிருக்கிற ஐடியாவும் புதுமையா இருக்கும். அப்படி சிறப்பான திரைக்கதை, வசனத்தை ரவிவர்மா பச்சையப்பன் எழுதியிருக்கார்.

     சரியா பண்ணியிருக்கார்

    சரியா பண்ணியிருக்கார்

    நீங்களே ஒரு ரைட்டர். ஏன் வேறொரு டைரட்டர்?

    நான் சிறுகதைகள் எழுதியிருக்கேன். நாவல்கள் எழுதியிருக்கேன். ஆனா, இந்தக் கதைக்கு ரவிவர்மா பச்சையப்பன் எழுதினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அருமையா பண்ணி யிருக்கார். அவர் ஏற்கனவே ஒரு படம் பண்ண இயக்குனர்ங்கறதால ஸ்கிரிப்ட்ல என்ன பண்ணணும்னு தெரியும். அதை ரொம்ப சரியா பண்ணியிருக்கார். படம் பார்த்தா அது புரியும்.

     சப் இன்ஸ்பெக்டர்

    சப் இன்ஸ்பெக்டர்

    'அன்பே அன்பே' படத்துக்கு பிறகு ஏன் இவ்வளவு லேட்?

    லேட்டுன்னு சொல்ல முடியாது. நான் சீரியல் பண்ண போயிட்டேன். சன், ஜெயா, ஜீ தமிழ் சேனல்கள் நிறைய சீரியல்கள் பண்ணினேன். இதுக்கிடையில சினிமாவுக்கான ஸ்கிரிப்ட்களையும் பண்ணி வச்சிருந்தேன். இப்ப சரியான வாய்ப்பு அமைஞ்சது. ஆரம்பிச்சாச்சு. இந்தப் படத்துல செங்குட்டுவன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரா வர்றார். அசிஸ்டென்ட் கமிஷனரா தீபக் ஷெட்டி நடிச்சிருக்கார். காமெடி ஏரியாவை ராஜ்குமார் பார்க்கிறார். எல்லாவிதமான ரசிகர்களுக்கும் பிடிச்ச படமா இருக்கும்.

    English summary
    Director Mani bharathi said his 'battery' movie is a crime thriller, It’s a story inspired from real-life incidents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X