ஓட்டல் அதிபருக்கு விபூதி அடித்த சீரியல் நடிகை.. பேராசையால் வீதிக்கு வந்த அசிங்கம்..பயில்வான் பேட்டி!
சென்னை: ஒட்டல் அதிபரிடம் இருந்து 10 லட்சம் ரொக்கம், சொகுசு காரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சீரியல் நடிகை ராணி, அவரது கணவர் பாலாஜி, கணவரின் நண்பர் என 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீரியல் நடிகை தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.
KING 24x7 யூடியூப் சேனலுக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், நேர்வழியில் சம்பாதிக்கும் பணம் தான் உடலில் ஒட்டும், தவறாக நாம் சம்பாதிக்கும் பணம், புகழுக்கும் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும், கடைசியில் சிறையில் அடைத்து விடும் என்பதற்கு இந்த நடிகை ஒரு உதாரணம். சீரியல் நடிகையின் பெயர் ராணி. பெயருக்கு ஏற்றார் போல ராணியாக வாழ ஆசைப்பட்டு இருக்கிறார். அப்படி ராணியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் ராஜாவின் மனைவியாக தான் இருக்க வேண்டும். ஆனால் இவரோ டிவி நடிகை. இவர் மீது தான் தினேஷ் ராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

அசிங்கம்: தினேஷ் ராஜ் கரூரில் ஒரு ஹோட்டலை நடத்தை வருகிறார். அந்த ஹோட்டலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல பணம் தேவைப்படுவதால், தினேஷ் ராஜ், அரசியல் பிரமுகர் ஜான்பாண்டியன் என்பவரை அணுகி இருக்கிறார். அவரின் மூலமாகத்தான் சீரியல் நடிகை ராணியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தினேஷ் ராஜிக்கே பணத்தேவை இருக்கும்போது, அவர் எதற்காக 10 லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார், நகைகளை நடிகைக்கு கொடுத்தார் என்று தெரியவில்லை. பணம் கொடுக்கல் வாங்கலுக்கு பின்னால், ஏதோ ஒரு அசிங்கமான விஷயம் இருக்கிறது,அதை தெரிந்து கொள்வதற்கு நாம் சென்றால் ஆபாசமும், அசிங்கமும் மிஞ்சும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக தினேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.
தொடர்பு இருக்கு: நடிகைக்கும் தொழில் அதிபருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்ததால் தான், அந்த தொழிலதிபர் நகை, பணம் என அனைத்தையும் நடிகையிடம் கொடுத்து இருக்கிறார். பின் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால், பணத்தை திருப்பி கேட்ட போது அவரை மிரட்டி இருக்கிறார். தினேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், நடிகை ராணி கணவருடன் தலைமறைவாகி இருக்கிறார். ஆனால், நிச்சயம் போலீசில் பிடிப்பட்டு விடுவார்கள். அப்படி பிடிபட்டால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதால், இந்த வழக்கில் இருந்து வெளியே வர வலுவான ஒரு வழக்கறிஞரை தேடி வருகிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











