நெப்போலியன் மறைத்த ரகசியம்.. அவரது மனசு ரணமாக இருக்கு.. பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் கடந்த ஆண்டு ஜப்பானில் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தனுஷூக்கு பல நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும், கடல் பயணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதனால், திருமணம் முடிந்த கையோடு தனுஷ் ஆசைப்பட்டபடி குடும்பத்துடன் அனைவரும் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். அதன் பின், நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, அண்மையில் தான் அமெரிக்காவில் உள்ள நெப்போலியனின் சொந்த வீட்டிற்கு வந்தார்கள்.
அந்த வீட்டில் தான் மாதம்பட்டி ரங்கராஜ், பரிதாபங்கள் கோபி, சுதாகர் தனுசை சந்தித்து பேசினார்கள். அந்த வீடியோவில் அக்ஷயா இல்லாததால் பலரும், மருமகள் எங்கே என கேட்டு வந்தனர். அதைத் தொடர்ந்த, எங்க வீட்டு குல தெய்வம் வந்துவிட்டார், என
தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றார். அக்ஷயா நடந்து வர அனைவரும் மலர் தூவி அவரை வரவேற்றனர். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

மறைத்துவிட்டார்: அதில், நடிகர் நெப்போலியன் தினம் தோறும் வீட்டுக்கு வருவர்கள் போவர்கள் என அவைரையும் வீடியோ எடுத்து பகிர்ந்து வந்தார். அதில் மருமகள் இல்லாதால், மருமகள் எங்கே என பலர் கமெண்ட்டில் கேட்டுவந்தார்கள். அக்ஷயா பல நாட்களாக அம்மா, அப்பாவை பார்க்காததால், அவர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என சென்றுவிட்டார். அதை நெப்போலியன் வீடியோவில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அதை சொல்லாமல் மறைத்துவிட்டார். ஏன் அதை மறைத்தார், மறைப்பதற்கு என்ன காரணம் என பல விஷயம் குறித்து பேசலாம். ஆனால், நெப்போலியனின் மனம் ஏற்கனவே ரணமாக இருக்கிறது. இதனால், அந்த விஷயம் பற்றி நெகட்டிவாக பேச வேண்டாம்.
மாதம்பட்டி ரங்கராஜ், பரிதாபங்கள் கோபி, சுதாகர் அண்மையில் சந்தித்து பேசினார்கள். அது தனுஷின் விருப்பமாக இருக்கலாம். தன் மகனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா போனவர் நெப்போலியன் அப்படி இருக்கும் போது, தன் மகனுக்காக இவர்களை வரவைத்து பார்க்க வைத்து இருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











