20 வருட ரகசியம்.. பல கோடி சொத்து.. சரோஜா தேவி வாழ்ந்த நிறைவான வாழ்க்கை!
சென்னை: இந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகையான சரோஜா தேவி நேற்று காலமானார். அவருடைய வயது 87. உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருந்த நிலையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.
அதில், அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் நேற்று உயிரிழந்தார். ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' திரைப்படத்தின் மூலம், சரோஜா தேவி நடிகையாக அறிமுகமானார் என்பது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், அதற்கு முன்பாகவே தமிழில் இரண்டு திரைப்படங்களில் சரோஜா தேவி அவர்கள் நடித்திருக்கிறார். அதாவது தமிழில் இரு படத்தில் நடனமாடிய பிறகுதான் மகாகவி காளி தாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பந்தலூர் கர்நாடகாவை சேர்ந்தவர். அவர் பெங்களுரில் நிகழ்ச்சி ஒன்றில் சரோஜா தேவியை பார்த்துவிட்டு, இவர் எம்ஜிஆருக்கு பொருத்தமாக இருப்பார் என நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்தார்.

சரோஜா தேவி: அந்த படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். எம்.ஜி.ஆர் உடன் மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன். ஜெமினி கணேசன். எஸ்.எஸ்.ஆர் என அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த பெருமை சரோஜா தேவியை சேரும். எம்ஜிஆர், சிவாஜி உடன் பல திரைப்படங்களின் நடித்த போதும் அவர்களுடன் எந்த வித கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்தார் சரோஜாதேவி.
காதல் திருமணம்: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த சரோஜா, ஸ்ரீ ஹர்ஷா என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஸ்ரீ ஹர்ஷாவுடன் சரோஜாதேவி நெருக்கமாக இருந்தார். ஏனென்றால், தமிழ், தெலுங்கு, கன்னடம், என அனைத்து மொழி படங்களிலும் சரோஜாதேவி கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். இதனால் வருமானவரித்துறை சரோஜாதேவியின் மீது கண் வைத்து. அவர், வீட்டில் வருமானவரி சோதனை நடத்தியது. இதில், சரோஜா தேவி மன உளைச்சலில் இருந்த போது ஸ்ரீ ஹர்ஷா, சரியான ஆடிட்டரை நியமித்து சரோஜாதேவியின் மன அழுத்தத்தை குறைத்தார். அதன் பின்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது.
எம்ஜிஆரின் மனம் கவர்ந்தவர்: திருமணத்திற்கு பின் சரோஜா தேவி நடிக்க மறுத்தார். ஆனால், ஸ்ரீ ஹர்ஷாவா திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதில் எந்த தவறு இல்லை என கணவர் சொல்லியதால், திருமணத்திற்கு பின்னும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அதன் பின், எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சரான பின், சரோஜா தேவியை அழைத்து அமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்லிய போதும், அதை வேண்டாம் என்று மறுத்தார். இதை பல பேட்டிகளில் சரோஜா தேவியே சொல்லி இருக்கிறார். சரோஜா தேவி கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஆதவன் படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஏன் என்றால், அந்த அளவிற்கு கோடி கோடியாக அவரிடம் சொத்து இருக்கிறது. சரோஜா தேவி ஒருநிறைவான வாழ்க்கையை வாழ்த்து மறைந்து இருக்கிறார். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


Click it and Unblock the Notifications











